தெலுங்கில் உப்பன்னா எனும் படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி அப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
தமிழில் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு என மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக தெலுங்கில் உப்பன்னா எனும் திரைப்படம் ஊரடங்குக்கு பின்னர் வெளியாக உள்ளது. அதில், ஹீரோயினுக்கு தந்தையாகவும், வில்லனாகவும் நடித்துள்ளார். இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ரிலீசிற்கு முன்னரே விஜய் சேதுபதி கைப்பற்றியுள்ளாராம். தமிழ் ரிமேக்கிலும் இவர் வில்லனாக நடிக்க உள்ளாரா அல்லது வேறு யாரும் நடிக்கின்றனரா என்ற விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக