அதாவது ஸ்கைப் சேவையில் புதிதாக மீட் நவ் (Meet Now) எனும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மீட் நவ் அம்சம் கொண்டு ஸ்கைப் காண்டாக்ட்கள் மட்டுமின்றி குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பை விடுக்க முடியும்.
குறிப்பாக அழைப்பை பெறுவோர் ஸ்கைப் அக்கவுண்ட் இல்லை என்றாலும், வீடியோ கால் இணைப்பில் இணைந்து கொள்ளலாம். சுருக்கமாக கூறவேண்டும் என்றால், மீட் நவ் அம்சம் கொண்டு ஒரு க்ளிக் செய்து பிரத்யேக லிண்க்கினை இலவசமாக உருவாக்கி கொள்ளலாம்.
முற்றிலும் இலவசமாக கிடைக்கும் மீட்டிங் லிண்க் நேரத்தின் அடிப்படையில் இடையிடையே நிறுத்தப்படாது என ஸ்கைப் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஸ்கைப் அழைப்புகளை 30நாட்கள் வரை கால் ரெக்கார்டிங்களை சேமித்து வைத்துக் கொள்ளும், பின்பு சாட்களில் பகிரப்படும் மீடியா ஃகைல்களை பின்னர பயன்படுத்த ஏதுவாக சேமித்து வைத்து கொள்ள முடியும்.
ஸ்கைப் மீட்டிங் கால் செய்யும் வழிமுறை
-ஸ்கைப் சேவையில் சைன்இன் செய்து மீட் நௌ universal Meet Now பட்டனை கிளிக் செய்யவும்.
-அடுத்து கால் லிண்க் கிடைக்குட், அதனை ஷேர் பட்டன் மூலம் மற்றவர்களுக்கு பகிர வேண்டும்.
-அழைப்புக்கு தயாரானதும் ஆடியோ அல்லது வீடியோ ஆப்ஷனில் ஒன்றை தேர்வு செய்து ஸ்டார்ட் கால் பட்டனை தேர்வு செய்தல் வேண்டும்.
-பின்பு இணைய வசதி கொண்டு மீட்டிங் உருவாக்கலாம்.
மீட் நவ் அம்சம் மூலம் ஸ்கைப் சேவையில் இணையும் வழிமுறை.!
ஸ்கைப் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனில் மீட் நவ் லிண்க் கிளிக் செய்தல் வேண்டும்.
சைன் இன் செய்யப்படவில்லை என்றாலும் அழைப்பில் இணைந்து கொள்ள முடியும்
அடுத்து டெஸ்க்டாப் சாதனத்தில் ஸ்கைப் இன்ஸ்டால் செய்யப்படவில்லை என்றாலும், ஸ்கைப் வெப் மூலம் அழைப்புகளை இணைந்து கொள்ள முடியும். பின்பு சாதனத்தில் ஸ்கைப் இன்ஸ்டால் செய்யக் கோரும் ஆப்ஷனும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக