சமூகவலைதளங்களில் பிரதானமான ஒன்று
சமூகவலைதளங்களில் பிரதானமான ஒன்றாக விளங்கி வருவது வாட்ஸ் ஆப். தகவலை பெரிதளவு பரப்பப்பட்டு வரும் இணையதளங்களில் வாட்ஸ் ஆப் முக்கியமான ஒன்று. அப்படி பரப்பப்பட்டு வரும் மெசேஜ்களில் எது உண்மை என்று அறியாமல் பகிரப்பட்டு வருகிறது.
கொரோனா பராவமல் தடுக்க மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கை
இந்த நிலையில் தற்போது கொரோனா பராவமல் தடுக்க மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதேசமயத்தில் கொரோனா தொடர்பாக பல வதந்திகள் பரப்பிப்பட்டு வருகிறது. இதை தடுக்கும் விதமாக வாட்ஸ் ஆப் அட்டகாச அறிமுகம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் ஆப்-ன் இந்த அறிமுகம் குறித்து பார்ப்போம்
வாட்ஸ் ஆப்-ன் இந்த அறிமுகம் குறித்து பார்ப்போம். தற்போது பார்வேர்ட் செய்யப்படும் மெசேஜ்களுக்கு பூதக்கண்ணாடி லென்ஸ் வடிவிலான ஒரு பட்டன் காண்பிக்கப்படும். அந்த லென்ஸ் வடிவை கிளிக் செய்து பார்த்தால் குறிப்பிட்ட பார்வேர்ட் மெசேஜ்ஜின் உண்மைத் தன்மை குறித்து பார்க்கலாம். அது உண்மையான தகவலா அல்லது போலியான தகவல் பரப்பப்படுகிறதா என காண்பிக்கப்படும்.
வாட்ஸ் ஆப்பில் பரப்பப்படும் தகவல்கள்
இந்த அறிமுகத்தின் மூலம் வாட்ஸ் ஆப்பில் பரப்பப்படும் தகவல்கள் போலியா அல்லது உண்மையா என பார்க்கலாம். அதோடு மட்டுமின்றி நாமும் அரசுக்கு ஒத்துழைக்கும் வகையில் போலி தகவலை பரவவிடாமல் தடுக்கலாம்.
லென்ஸ் வடிவான ஒரு பட்டன்
வாட்ஸ் ஆப் பயனர்கள் தங்களது பார்வேர்ட் மெசேஜ்களை பூதக்கண்ணாடி அதாவது லென்ஸ் வடிவான ஒரு பட்டன் காண்பிக்கும். அதை கிளிக் செய்தபிறகு வாட்ஸ் ஆப் ஒரு பாப் அப் அம்சம் காண்பிக்கும்.
வெப் மூலமாக தேட விரும்புகிறீர்களா
அப்படி கிளிக் செய்தவுடன் இதை வெப் மூலமாக தேட விரும்புகிறீர்களா என்று காட்டும். அதன்மூலம் வெப் மூலமாக தங்களது தகவலை தேடலாம். அதேபோல் அதை கிளிக் செய்தவுடன் வெப் மூலம் தேட விரும்புகிறீர்களா அல்லது கேன்சல் செய்யவேண்டுமா என காண்பிக்கும். இதை பயன்படுத்தி பரிசோதிக்கலாம்.
வாட்ஸ் ஆப்பில் போலியா தகவலை பரப்புவதை தடுக்க முடியும்
இந்த அம்சத்தின் மூலம் வாட்ஸ் ஆப்பில் போலியா தகவலை பரப்புவதை தடுக்க முடியும். அப்படி பரப்பப்படும் போலியான தகவலை நாம் பரப்பாமல் முட்டுக்கட்டை போட்டு தடுக்க முடியும்
பீட்டா வழியாக கிடைக்கப்பெற்ற தகவல்
தற்போது இந்த தகவலானது வாட்ஸ் ஆப் பீட்டா வழியாக கிடைக்கப்பெறுகிறது. இந்த அம்சமானது முதல் கட்டமாக ஆண்ட்ராய்டு தளத்தில் தான் முதலில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இது சோதனை கட்டத்தில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக