கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்த்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எச்சரிக்கை.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மருத்துவரின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே மருத்துவரின் உடல் அடக்கத்தை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக ஏற்கனவே 21 பேர் கைது செய்யப்பட்டு, 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக