சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய சாம்சங் கேலக்ஸி ஜே2 கோர் 2020 ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம், தங்க நிறங்களில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஜே2 கோர் 2020 ஸ்மார்ட்போன் மாடல் 5.0-இன்ச் ஙர்னு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 960 x 540 பிக்சல் திர்மானம் மற்றும் 16:9 திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும்
இந்த சாதனத்தின் கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெறவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போனில் 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் எக்ஸிநோஸ் 7570சிப்செட் உடன் மாலி-டி720 ஜிபியு வசதி
இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ(கோ எடிஷன்) இயங்குதளத்தை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஜே2 கோர் 2020
ஸ்மார்ட்போன் மாடல்.
சாம்சங் கேலக்ஸி ஜே2 கோர் 2020 ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
சாம்சங் கேலக்ஸி ஜே2 கோர் 2020 ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி ஜே2 கோர் 2020 ஸ்மார்ட்போனில் புளூடூத் 4.2, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, யுஎஸ்பி 2.0, ஜிபிஎஸ்
டூயல் சிம்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் 154கிராம் எடை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
சாம்சங் கேலக்ஸி ஜே2 கோர் 2020 ஸ்மார்ட்போனில் 2600எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த சாதனத்தின் மென்பொருள் அமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
சாம்சங் கேலக்ஸி ஜே2 கோர் 2020 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,299-ஆக உள்ளது, மேலும் இந்த சாதனத்தின் விற்பனை பற்றி தகவல் எதுவும் இல்லை, தகவல் கிடைத்ததும் உடனே அப்டேட் செய்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக