கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் வசிக்கும் இளம் பெண்கள் 15 பேரின் புகைப்படங்களை, முகம் தெரியாத இன்ஸ்டாகிராம் நபர் தவறுதலாகப் பயன்படுத்தியதாக இளம் பெண் தொடுத்த புகாரின் பெயரில், போலி இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட் உரிமையாளரை சைபர் கிரைம் போலீசார் தேடி வந்தனர். சைபர்டோம் பாஸ்ட் ட்ராக்கிங் முறையைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட அந்த போலி இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட் உரிமையாளரை சைபர்டோம் தேடியுள்ளது.
விபச்சாரம் செய்வதாக பெண்களின் புகைப்படங்கள்
கோழிக்கோடு பகுதியில் உள்ள 15 பெண்களின் புகைப்படங்களை இழிவுபடுத்தும் படி, இவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள் என்று முகம் தெரியாத அந்த நபர் செய்த காரியம் கரணம் இல்லாததாக இருந்துள்ளது. கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த மன்ஜாஸ் என்ற இளைஞர் கேரளா மாவட்ட காவல்துறை வெறும் மூன்றே நாட்களில் கைது செய்தது. இவர் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் சுமார் 5 போலி அக்கௌன்ட் வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
போலி அக்கௌன்ட் வைத்தவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதுகேரளா சைபர்டோம் உதவியுடன் அந்த இளைஞரின் அக்கௌன்ட் விபரங்களை வைத்துத் தேடியுள்ளது. புகாரைப் பெற்ற மூன்று நாட்களில் கணக்கு வைத்திருப்பவர் அடையாளம் காணப்பட்டதாக வட்ட ஆய்வாளர் மற்றும் சைபர்டோமின் பொறுப்பான நோடல் அதிகாரி கூறினார். நாடகாவு வட்ட ஆய்வாளர் அஷ்ரப் தலைமையிலான குழுவினர் மஜ்னாஸை கைது செய்தனர்.
மூன்று வழக்குகள் பதிவு
மஜ்னாஸ் மீது கோழிக்கோடு மாவட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, அவற்றில் ஒன்று நாடக்காவு நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது, மற்ற இரண்டு வழக்குகள் பாலுசேரி மற்றும் பெரம்ப்ரா நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏன் இப்படி செய்தார்?இந்த இளைஞர் மீது ஐ.டி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், காவல்துறையினரின் கூற்றுப்படி படங்களைத் தவறாகப் பயன்படுத்தியதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
அதிகரிக்கும் ஆன்லைன் சித்திரவதை மற்றும் ஆன்லைன் மிரட்டல்
பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர் ஒருவர் கூறியதாவது, இன்ஸ்டாகிராம் இல் போலி கணக்கு வைத்திருப்பவர்கள் பெண்களுக்கு ஆன்லைன் சித்திரவதை மற்றும் ஆன்லைன் மிரட்டல்களை விடுத்தது வருகின்றனர், இதை காவல்துறை கட்டுக்குள் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெரும் மன வேதனையையும் அவமானமும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக