விமானங்கள் தரையிறக்கப்பட்டன. குறைவான ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அவசர அவசரமாக பணிபுரிந்த காலம் போய்விட்டது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் காரணமாக உலகமே குறிப்பாக நகரங்களில் மிகவும் வித்தியாசமாக சூழல் காணப்படுகிறது.
நிலநடுக்கவியலாளர்களின் கூற்றுப்படி, மனித நடமாட்டம் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட வாகனங்களின் இயக்கங்கள் கடுமையான குறைப்பு காரணமாக பூமியே கணிசமாக தனது நிலையை நகர்த்துவதற்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கிரகமே 'அசையாமல் நிற்பது போல் தோன்றுகிறது.
பெல்ஜியம் நாட்டில் உள்ள ராயல் அப்சர்வேட்டரியில் உள்ள புவியியலாளரும் நிலநடுக்கவியலாளருமான தாமஸ் லெகோக் என்பவர் இதுகுறித்து கூறியபோது, 'இந்த ஊரடங்கு உத்தரவு தொடங்கியதிலிருந்து நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் சுற்றுப்புற நில அதிர்வு சத்தத்தில் 30 முதல் 50 சதவிகிதம் குறைந்து இருப்பதை தான் கவனித்ததாக தெரிவித்துள்ளார். இதையே சி.என்.என் அறிக்கைகளும் கூறுகின்றன.
"நீங்கள் குறைந்த சத்தத்துடன் ஒரு சமிக்ஞையை கூட அறிய முடியும். அந்த நிகழ்வுகளில் இருந்து இன்னும் கொஞ்சம் தகவல்களைக் திரட்ட உங்களால் முடியும் என்று வாஷிங்டன் டி.சி.யில் உள்ள நில அதிர்வுக்கான ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் நில அதிர்வு நிபுணர் ஆண்டி ஃப்ராஸ்ஸெட்டோ நேச்சர் என்பவர் கூறியுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இங்கிலாந்தில் உள்ள மேற்கு லண்டன் ஆராய்ச்சியாளர்களும் இதேபோன்ற ஒரு போக்கைக் கவனித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் மனித நாகரிகத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள தொலைதூர நிலையங்களிலிருந்து டேட்டாக்களை சேகரிக்கும் நில அதிர்வு வல்லுநர்கள் இயற்கையில் உள்ள ஒரு மாற்றத்தையும் காண மாட்டார்கள். எனவே தற்போதைய தொற்று நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாக்க குறைந்தபட்சம் நாம் செய்ய செய்யப்போவது ஒன்றே ஒன்று தான். இந்த வைரஸ் அதன் தாக்கத்தை இழக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும். நாம் நமது வீட்டின் உள்ளே இருப்பது மட்டுமே பாதுகாப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக