ஹூவாய் நிறுவனத்தின் ஐபோன் மாடலுக்கு இணையான நோவா 7 சீரிஸ் போன்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், அதன் வெளியீட்டுத் தேதி தகவலின் அடிப்படையில் வெளியாகியுள்ளது.
ஹூவாய் நிறுவனத்தின் அடுத்த படைப்பான புதிய வகை மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட் போனானது ஏப்ரல் 23 ஆம் தேதி அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தள்ளிப்போடப்பட்டுக் கொண்டே வருகிறது
பலவகை ஸ்மார்ட் போன்களின் அறிமுகத் தேதியும் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போடப்பட்டுக் கொண்டே வருகிறது. இந்த அனைத்து மாடல் போன்களும் 5ஜி ஆதரவோடு வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹூவாய் 7, எஸ்இ, ப்ரோதற்போது ஹூவாய் வெளியிட இருக்கும் இந்த புதிய வகை ஸ்மார்ட் போன்கள் குறித்து பார்க்கலாம். அதில் ஹூவாய் 7, எஸ்இ, ப்ரோ ஆகிய மூன்று மாடல்களில் வெவ்வேறு வகை சிப்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் நோவா 7 எஸ்இ மாடலில் கிரின் 820 சிப் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நோவா 7 மாடல் அறிமுகம்
அதேபோல் நோவா 7 மாடல் அறிமுகத்தில் கிரின் 980 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என்றும், அதேபோல் ப்ரோ மாடல் போனில் கிரின் 990 5ஜி சிப் வசதியோடு இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. நோவா 7 ப்ரோ மாடல் போனானது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.37,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவில் ஹூவாய் நிறுவனம் அறிமுகம்
அதேபோல் மலேசியாவில் ஹூவாய் நிறுவனம் தனது நோவா 7ஐ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக ஐபோன் மாடல்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
ஹூவாய் நோவா 7ஐ அட்டகாசமான டிஸ்பிளே
அட்டகாசமான டிஸ்பிளே ஹூவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக சிங்கிள் பன்ச்-ஹோல் டிஸ்பிளே வடிவமைப்பு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி
ஹூவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
ஹூவாய் நோவா 7ஐ கேமரா வசதி
ஹூவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் உள்ளது.
ஹூவாய் நோவா 7ஐ பேட்டரி வசதி
ஹூவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போனில் 4200எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 40வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
இந்திய மதிப்பில் 18,900
ஹூவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போனின் விலை ஹூவாய் நோவா 7ஐ ஸ்மார்ட்போனின் விலை RM 1,099-ஆக உள்ளது (இந்திய மதிப்பில் 18,900). மேலும் இந்த சாதனம் கருப்பு, பிங்க், பசுமை போன்ற நிறங்களில் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக