கொரோனா சோதனை முடிவுகளை இரண்டு மணிநேரத்தில் அறிந்துகொள்ளும் வகையில் சோதனை கிட்களை கேரளாவில் உள்ள ஒரு நிறுவனம் வடிவமைத்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களை வெறும் 30 நிமிடத்தில் கன்டறியப் பயன்படும் ரேபிட் டெஸ்ட் கிட்களை தமிழக அரசு சீனாவில் ஆர்டர் செய்திருந்தது. ஆனால் மத்திய அரசோ தாங்களே மொத்தமாக உபகரணங்களை வாங்கி மாநில அரசுக்கு பகிர்ந்தளிப்போம் என அறிவித்தது. இதையடுத்து நேற்று மொத்தமாக 1.7 லட்சம் பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியா வந்தடைந்தன.
இந்நிலையில் இந்தியாவிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் சோதனையை 10 நிமிடத்தில் முடிவுகளை 2 மணிநேரத்திலும் கண்டறியும் விதமாக சோதனைக் கிட்களை சித்ரா திர்னூர் மருத்துவக் கல்லூரி தயாரித்துள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். இந்த செய்தியானது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கேரளாவின் அந்த மருத்துவக் கல்லூரிக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக