மனைவியை கொலை செய்துவிட்டு அனைவரையும் ஏமாற்றும் வகையில் தனது மனைவி கொரோனா வார்டில் சிகிச்சை பெறுவதாக மனைவியின் உறவினர்களை ஏமாற்றிய கணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஆண்டனி டேவிட் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது இதனை அடுத்து இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திடீரென அவரது மனைவியை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என்று கூறப்பட்டது. இதனை அடுத்து அவரது உறவினர்கள் சந்தேகப்பட்டு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அவரது கணவரிடம் விசாரணை செய்தபோது தனது மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெறுவதாக கூறினார்
இதனை அடுத்து அவர் கூறிய மருத்துவமனை சென்று பார்த்தபோது அப்படி ஒரு நபர் சிகிச்சைக்கு வரவில்லை என்று மருத்துவமனை ஊழியர்கள் கூறினார்கள். இதனை அடுத்து அந்தோணியை போலீசார் மேலும் விசாரணை செய்தபோது தனது மனைவியை கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். மேலும் அவரது படுக்கை அறையில் ரத்தக்கறையுடன் கூடிய துணி ஒன்றையும் போலீஸார் கண்டெடுத்தனர். இதனை அடுத்து அந்தோணி தனது மனைவியை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக