Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 25 ஏப்ரல், 2020

இனி அந்த சேவை இலவசம்! பஞ்சாப் நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் பரிசு!


ரத்து

கொரோனா வைரஸ் தலை தூக்கிய பின், வெளியில் வங்கிக்குச் சென்று பணத்தை எடுப்பது, பணத்தை பரிமாற்றம் செய்வது, செக் மூலம் பணம் போடுவது எல்லாம் அரிதிலும் அதிதாகிவிட்டது.

பெரும்பாலும், ஆன்லைன் பேங்கிங் முறையில் நெட் பேங்கிங் உபயோகித்தோ அல்லது மொபைல் பேங்கிங் உபயோகித்தோ பணத்தை பரிமாற்றம் செய்துவிடுகிறோம். அல்லது பேமெண்ட் அப்ளிகேஷன்கள் வழியாகவோ நமக்குத் தேவையான பணப் பரிமாற்றங்களைச் செய்துவிடுகிறோம்.

இந்த நேரத்தில் இந்தியாவின் இரண்டாவது பெரிய அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்க் ஒரு நல்ல காரியத்தைச் செய்து நம்மைக் குளிரச் செய்து இருக்கிறது.

கட்டணம்

பொதுவாக நெட் பேங்கிங் முறையில் பணம் அனுப்புபவர்கள் ஐ எம் பி எஸ் (IMPS - Immediate Payment Service) சேவைகளைத் தான் அதிகம் பயன்படுத்துவார்கள். காரணம் உடனடியாக பணப் பரிமாற்றம் நடக்கும். இந்த ஐ எம் பி எஸ் சேவைக்கு ஒரு சில ரூபாய்களை கட்டணமாக வங்கிகள் வசூலிக்கின்றன.

ரத்து

பஞ்சாப் நேஷனல் பேங்க், நேற்று ஏப்ரல் 23, 2020 அன்று, தன் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஐ எம் பி எஸ் முறையில் பணத்தை பரிமாற்றம் செய்தால் கட்டணம் வசூலிக்கப்படாது எனச் சொல்லி இருக்கிறது. இது உண்மையாகவே வாடிக்கையாளர்களுக்கு நல்ல பரிசு தானே!

கட்டணம் கூடாது

ஏற்கனவே ஆர்பிஐ விதிகள் படி NEFT & RTGS சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது பஞ்சாப் நேஷனல் பேங்கில்

ஐ எம் பி எஸ்,

நெஃப்ட்,

ஆர் டி ஜி எஸ்,

யூ பி ஐ... என எல்லா விதமான பணப் பரிமாற்றங்களையும் இலவசமாகச் செய்யலாம்.

வங்கிக் கிளை

NEFT & RTGS சேவைகளை ஆன்லைனில் செய்யாமல், வங்கிக் கிளைகளுக்கு வந்து செய்தால், பஞ்சாப் நேஷனல் பேங்க் வசூலிக்கும் ஒரு குறைந்தபட்ச கட்டணத்தை வசூலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி மற்ற வங்கிகளும் ஐ எம் பி எஸ் கட்டணத்தை வசூலித்தால் சிறப்பாக இருக்கும். செய்வார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக