Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 25 ஏப்ரல், 2020

ஆவின் பொருட்களை விநியோகம் செய்ய DUNZO, ZOMATO-வுடன் தமிழக அரசு ஒப்பந்தம்...

ஆவின் தயாரிப்புகளை பொதுமக்களிடன் கொண்டு சேர்பதற்காக டன்ஸோ மற்றும் ஜொமாடோவுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆவின் தயாரிப்புகளை பொதுமக்களிடன் கொண்டு சேர்பதற்காக டன்ஸோ மற்றும் ஜொமாடோவுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

'ஆவின்' என்று பிரபலமாக அறியப்படும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட், பூட்டுதலின் போது மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பால் மற்றும் பால் பொருட்கள் வழங்கலுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் விலக்கு அளித்துள்ளதைக் குறிப்பிட்டுள்ள ஆவின், பால் தனது சொந்த சில்லறை விற்பனையாளர்கள் மூலமாகவும், தற்காலிக கடைகளை அமைப்பதன் மூலமாகவும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

Aavin on wheels அங்காடி உங்கள் இல்லங்களின் அருகே அமைக்க இங்கே பதிவு செய்யவும்: https://t.co/l46AxPrJdL

— Aavin (@Aavinindia) April 20, 2020

மேலும் இந்த சமையத்தில் ஒரு சில்லறை விற்பனையாளர் அங்கீகரிக்கப்பட்ட அவின் பால் சப்ளையராக மாற முடியும் என்று ஆவின் குறிப்பிடுகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வர்த்தக நிறுவனங்களையும் ஆவின் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ வெளியீடு ஒன்று, முந்தைய 22.50 லட்சம் லிட்டரிலிருந்து ஒரு நாளைக்கு 24.50 லட்சத்திற்கு பால் விநியோகத்தில் ஆவின் முன்னேற்றம் கண்டுள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் ஜொமாட்டோ, டன்ஸோ மூலம் தனது பால் பொருட்களை விநியோகிக்கத் தொடங்கியுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது, இதனால் ஆவின் தயாரிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

முழு அடைப்பை கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பால் மற்றும் பால் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக