Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 25 ஏப்ரல், 2020

இனி சூர்யா படங்களை திரையிட மாட்டோம்: OTT ரிலீஸுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தால் திரைப்படத்தை தியேட்டர்களில் வெளியிடாமல் நேரடியாக OTT தளத்தில் வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு தியேட்டர் உரிமையாளர்கள்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இரண்டு மடங்கு லாபத்திற்கு அமேசான் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. கொரோனா பிரச்சனை காரணாமாக மூடப்பட்டுள்ள தியேட்டர்கள் மீண்டும் திறக்க இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும் என்பதால் தான் இந்த முடிவை சூர்யா எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதை அறிந்து தியேட்டர் 
உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.பன்னீர் செல்வம் சூர்யாவின் நிறுவனத்திடம் போன் செய்து பேசினாராம். ஆனால் அவர்கள் எதையும் கேட்பதாக இல்லை, நேரடி டிஜிட்டல் ரிலீஸ் என்பதில் உறுதியாக உள்ளார்களாம். சென்னையில் முன்னணி தியேட்டரான ரோகிணி தியேட்டரின் உரிமையாளர் தான் ஆர்.பன்னீர் செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி பேசியுள்ள பன்னீர் செல்வம், "நாங்கள் வேண்டாம் என சொன்னால் அவர்கள் கேட்கவில்லை. இதை மீறி அவர்கள் OTTயில் ரிலீஸ் செய்தால், இனி அந்த நிறுவனம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் எடுக்கும் படங்கள் அனைத்தையும் OTTயிலேயே ரிலீஸ் செய்து கொள்ளுங்கள், எங்கள் தியேட்டர்களுக்கு உங்கள் படங்கள் வேண்டாம் என கூறிவிட்டோம்" என தெரிவித்துள்ளார்.
இதனால் சூர்யாவிற்கு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படம் ரிலீஸுக்கு தயாராகி இருக்கும் நிலையில், இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பு உள்ளது என சினிமா துறையினர் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக