ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது தமிழக அரசு.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகள் , மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன.ஆனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகம் கூடி வந்தது.
இந்நிலையில் மளிகை பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க, ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் விற்க அரசு முடிவு செய்துள்ளது. துவரை, உளுந்து, கடலை பருப்புகள், மிளகு, சீரகம், டீ தூள், உப்பு உள்ளிட்ட 19 வகையான மளிகைப்பொருட்கள் ரூ.500 க்கு விற்பனை செய்யப்பட உள்ளது .33 மாவட்டங்கள் வாரியாக 10 லட்சம் பைகள் விற்க திட்டமிட்டுள்ளது தமிழக அரசு.
நியாய விலைக்கடைகளில் மளிகைப் பொருட்கள் விற்பனை. துவரை, உளுந்தம் பருப்பு கடலை, மிளகு,சீரகம் உள்ளிட்ட 19 வகையான மளிகைப் பொருட்கள் 500க்கு விற்பனை செய்யப்பட உள்ளது - தமிழக அரசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக