Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

தங்களின் இரட்டை குழந்தைகளுக்கு 'கோவிட் - கொரோனா' என பெயரிட்ட இந்திய தம்பதி.!


கொரோனா பாதிப்பு உலக நாடுகளையே உலுக்கி வருகின்றன. சில நாடுகள் கொரோனா எனும் பெயரை கேட்டாலே மிரண்டுவிடுகின்றனர். சில நாடுகள் கொரோனா எனும் பெயரை உபயோகிக்க தடை விதித்த செய்தியெல்லாம் நாம் அறிந்தோம். 

இந்நிலையில், இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி ஒரு தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. 

இந்த குழந்தைகளில் ஆண் குழந்தைக்கு கோவிட்  எனவும், பெண் குழந்தைக்கு கொரோனா எனவும் அந்த தம்பதியினர் பெயரிட்டுள்ளனர். இது குறித்து அந்த அக்குழந்தைகளின் தயார் கூறுகையில்,' பல கஷ்டங்களை கடந்து பிரசவம் நடைபெற்றது. எனவே, நானும் என் கணவரும் குழந்தைகள் பிறந்த தினத்தை மறக்கமுடியாத நாளாக மாற்ற விரும்பினோம். அதனால், கோவிட் - கொரோனா என பெயர்களை வைத்தோம். இந்த கொரோனா வைர ஸ் மக்களிடம் சுகாதாரம் மற்றும் சில நல்ல பழக்கவழக்கங்களை ஊக்குவித்துள்ளது.' என விலகாலமளித்தார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக