இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பலவும் சமூக விலகல், ஊரடங்கு போன்றவற்றை அமல்படுத்தி உள்ளன. எனவே ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டிய காலங்களில் மக்கள் வீட்டிலேயே இருப்பதால் ஆப்பிள் வெள்ளிக்கிழமை தனது ஆப்பிள் டிவி பிளஸ் ஸ்ட்ரீமிங் தளத்திலிருந்து பயனர்களுக்கு, அதன் ஆப்பிள் டிவி பயன்பாட்டின் மூலம் பார்க்க, இந்தியா உட்பட 100 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிகழ்ச்சிகளை இலவசமாக பார்க்கும் வசதியைக் கொண்டுவந்துள்ளது.
எனவே ஓப்ராஸ் டாக்ஸ் ஆன் COVID-19, லிட்டில் அமெரிக்கா, செர்வன்ட், ஃபார் ஆல் மேன்கைண்ட், டிக்கின்சன், ஸ்னூபி இன் ஸ்பேஸ், கோஸ்ட்ரைட்டர், ஹெல்ப்ஸ்டர்ஸ் மற்றும் தி எலிபேண்ட் குயின் உள்ளிட்ட இலவச நிகழ்ச்சிகளை நிறுவனம் வழங்குகிறது.
ஆனாலும் ஆப்பிளின் கோல்டன் குளோப் பரிந்துரைக்கப்பட்ட மார்க்யூ ஷோ ஆன ‘தி மார்னிங் ஷோ' இந்த இலவச வழங்களில் மூலம்
கிடைக்கவில்லை, எனவே நிரல்களை ஆப்பிள் டிவி பயன்பாட்டில் உள்ள apple.co/FreeForEveryone மூலம் அணுகலாம்.
குறிப்பாக இந்த ஆப்பிள் டிவி பிளஸ் பயன்பாடு ஆனது ஐபாட், ஐபோன், ஐபாட் டச், மேக், தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்சங்மற்றும் எல்ஜி ஸ்மார்ட் டிவிகள் மற்றும் அமேசான் ஃபயர் டிவி மற்றும் ரோகு போன்ற சாதனங்களில் கிடைக்கிறது.
குறிப்பாக இந்த ஆப் பயன்பாடு ஆனது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கிடைக்கவில்லை, ஆனால் பயளனர்கள் அதை இணைய உலாவியல் ஸ்ட்ரீம் செய்யலாம்.
கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பலவும் சமூக விலகல், ஊரடங்கு போன்றவற்றை அமல்படுத்தி உள்ள நிலையில் இலவச உள்ளடக்கத்தையும் நீட்டிக்கப்பட்ட இலவச சோதனைகளையும் வழங்க ஆப்பிள் டிவி பிளஸ்
HBO, AMC மற்றும் பிற ஸ்ட்ரீமிங் சேவைகளுடன் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக