COVID-19 பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் சமூக தூரத்தைத் தக்க வைத்துக் கொள்ள குடைகளைப் பயன்படுத்துவதற்கான கேரளாவின் தனித்துவமான போக்கு, மேற்குத் தமிழ்நாட்டின் ஓரிரு மாவட்டங்களிலும் கடைப்பிடிக்க தூண்டியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் சேலம் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள், வீட்டை விட்டு வெளியேறும்போது குடைகளைப் பயன்படுத்துமாறு மக்களிடையே வேண்டுகோள் விடுத்துள்ளனர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன், அத்தியாவசிய வேலைகளுக்காக வீட்டை விட்டு வெளியேறும்போது ஒரு குடையை எடுத்துச் செல்லுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதுதொடர்பான அறிவிப்பில் அவர் குறிப்பிடுகையில்., "முழுமையான ஊரடங்கிற்கு பின், அத்தியாவசிய பொருட்களை வாங்க வீடுகளில் இருந்து வெளியேறும் மக்கள் பொது இடங்களில் சமூக தூரத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஒரு குடையை எடுத்துச் செல்ல வேண்டும், மேலும் COVID19 நோயால் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கருத்தை மேலும் விளக்கி, ஆட்சியர் தொற்றுநோயிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சமூக விலகல் தேவை என்று கூறினார். "குடைகளைப் பயன்படுத்துவதன் மூலம், சமூக விலகல் சாத்தியப்படும். எனவே தொற்றுநோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் கையில் குடைகளை எடுத்து செல்ல வேண்டும்" என குறிப்பிட்டார்.
திருப்பூர் ஆட்சியரின் அறிவிப்பினை தொடர்ந்து, பல அமைப்புகளும் இந்த பழக்கத்தை வளர்ப்பதற்காக மக்களுக்கு குடை நன்கொடை அளிக்க முன்வந்துள்ளன.
இதேபோன்ற முயற்சியில், சேலம் ஆட்சியர் S.A.ராமன், சேலத்தில் உள்ள மக்களை சமூக தூரத்தை பராமரிக்க வீடுகளில் இருந்து வெளியே வரும்போது ஒரு குடை பயன்படுத்துவதில் கேரள மக்களை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், சமூக விலகலை பராமரிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் குடை எடுத்துச் செல்வது ஞாயிற்றுக்கிழமை முதல் கட்டாயமாக்கப்படுகிறது என அதிரடி உத்தரவினையும் வெளியிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக