ஜெர்மனில் கொரோனா வைரஸை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு, போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தால், நிர்வாண செல்பிக்களை வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளதையடுத்து, இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்தந்த நாட்டுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் மக்களை காக்கும் பணியில் வெளியில் இறங்கி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால், மருத்துவர்கள் நிர்வாண செல்பிகளை வெளியிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இவர்கள், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தங்களது நிர்வாண செல்பிகளை வெளியிட்டு வருகிறார்கள். பல மாதங்களாக தாங்கள் பாதுகாப்பு உபகரணங்கள் கோரியும் எந்த பலனுமில்லாத காரணத்தால், ஜெர்மன் அமைச்சர்களுக்கு இதனை தெரியப்படுத்தும் வகையில், மருத்துவர்கள் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளார்கள்.
இதுகுறித்து இவர்கள் கூறுகையில், எங்களிடம் இருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் செலவழிந்து போனால், நாங்கள் இப்படித்தான் இருக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்த்தும் வண்ணம் மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களின் போராட்டம், பிளாங்க் பெடென்கென் அல்லது நிர்வாண குவால்ஸ் என அழைக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த காலங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், பணிக்கு செல்வது நிர்வாணமாக வேலை செய்வதற்கு சமம் என்று கூறுகிறார்கள்.
இந்நிலையில், பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பு அதிகரித்தாலும், நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருப்பதால், இன்னமும் அவற்றின் பற்றாக்குறை குறையவில்லை.
முககவசம், கண் கண்ணாடிகள், கையுறைகள் மற்றும் ஏப்ரன்களை மருத்துவர்கள் தொடர்ந்து கேட்டவண்ணம் இருந்தபோதிலும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக