Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 29 ஏப்ரல், 2020

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தற்போது சாத்தியமா?! உச்சநீதிமன்றத்தில் விசாரணை.!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டிருந்தது.

கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்செரிகை நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசானது ஏற்கனவே நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை ஜூன் மாதம் முதல் அமல்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தது.

இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை தற்போது அமல்படுத்தினால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள், வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என பல தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என கூறி, இதனால் உடனே இந்த திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ரீபக் கன்சால், சஞ்ஜய் குமார் விசன் ஆகிய வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை காணொலி மூலம் விசாரித்த நீதிபதிகள் என்.வி. ரமணா, எஸ்.கே.கவுல், பி.ஆர்.கவாய் ஆகியோர் கூறுகையில், ' ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு ஜூன் மாதம் அமல்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு திட்டத்தில் நாங்கள் குறுக்கிட விரும்பவில்லை.

மேலும், தற்போதைய சூழ்நிலையில், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த முடியுமா என மத்திய அரசுதான் கலந்தாலோசிக்க வேண்டும்.' என கூறி வழக்கை முடித்துவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!