சுகாதாரத்துறை செயலாளர் தகவலை மாற்றி கூறியதாக இணையத்தில் அவதூறு பரப்பிய அடையாள தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பின் போது கொரோனாவுக்கு பாதிக்கப்பட்ட முதல் நபர் பிப்ரவரி மாதமே கண்டறியப்பட்டதாகவும், மற்றொரு முறை மார்ச் மாதத்தில் முதல் நபர் வந்ததாக மாற்றி கூறினார் என்று அடையாளம் தெரியாத நபர்கள் வீடியோ வெளியிட்டு சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பரப்பியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தகவல்களை மாற்றி கூறியதாக சமூக வலைத்தளத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவதூறு பரப்புவதாக தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ட்விட்டரில் அவதூறாக வீடியோ வெளியிட்ட நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாணையை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை யார் என்று தெரியாத காரணத்தினால் முதல் தகவல் அறிக்கையிலும் அடையாள தெரியாத நபர் என்று பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக