லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக்கிறார், மேலும் சாந்தனு, அர்ஜுன் தாஸ் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.
சேவியர் பிரிட்டோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார், இந்த படத்திலிருந்து வெளிவந்த அணைத்து பாடல்களும் மக்களுக்கு மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவிருந்த நிலையில் கோரனோ வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றுள்ளது, மேலும் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டிரைலருக்காக விஜய் ரசிகர்கள் காத்துள்ளனர், மேலும் தற்பொழுது விஜய் ரசிகர்களை உற்சாகம் படுத்தும் வகையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களில் அவர் இரட்டை வேடத்தில் தான் நடித்துக்கொண்டு வருகிறார், அதை போல் மாஸ்டர் படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இதற்கான ஆதிகார்வபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது,
பொழுதுபோக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக