சீன அரசு கடந்த சில வருடங்களாக ரகசிய அணு ஆயுத சோதனையில் ஈடுப்பட்டு வந்தது தற்போது தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. சீனாவில் தான் முதலில் இந்த வைரஸ் உருவெடுத்து தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா ஒரு பக்கம் இருந்தாலும் சீனா அணு ஆயுத சோதனைகளை ரகசியமாக மேற்கொண்டு வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், ஜின்ஜியாங் மாகாணத்தில் அணு ஆயுத சோதனை தளமாக உள்ள லோப் நூர் பகுதியில் சீன அரசு கடந்த சில வருடங்களாக ரகசிய அணு ஆயுத சோதனையில் ஈடுப்பட்டு வந்தது தற்போது தெரியவந்துள்ளது.
அங்கு நடைபெறும் அணு ஆயுத சோதனையில் அதிர்வுகள் வெளியே வராத அளவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு ரகசியமாக செயல்படுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக