நடிகர் அமீர்கான் இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் , மேலும் தற்பொழுது சில புதிய படங்களில் கமிட் ஆகியுள்ளார் இந்த நிலையில் நடிகர் அமீர்கானை குற்றவாளியென கூறி பாகிஸ்தான் ஒரு தனியார் டிவி சேனல் இவரின் புகைப்படத்தை வெளியிட்டது மேலும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த டிவி சேனல் ஒன்று நேற்று முன்தினம் 17 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான அமீர்கான் பிடிப்பட்டார் என்று கூறி குற்றவாளி அமீர்கானின் புகைப்படத்திற்கு பதிலாக இந்தி நடிகரான அமீர்கானின் புகைப்படம் காட்டப்பட்டது.
இதனை பார்த் பலர் தற்பொழுது அதிர்ச்சியடைந்துள்ளார்கள் . மேலும் இந்த செயலை நெட்டிசன்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் டிவி சேனலின் பொறுப்பற்ற செயலை கண்டித்து வருகின்றனர். அதனையடுத்து அந்த டிவி சேனல் தங்களது தவறுக்காக மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இந்த செய்தி தற்போது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக