கொரோனா வைரஸ்
தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்கள் தங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர், எனவே அப்படி வீட்டில் இருக்கும் மக்கள் தங்களின் பெலும்பாலான நேரத்தை மொபைல் போன்களிலும் இணையதளத்திலுமே
கழித்துவருகின்றனர். இதனால் தற்போது உலகம் முழுவதுமே இணைய பயன்பாடு அதிகளவில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் அதிக அளவிலான இணைய பயன்பாட்டால் ஏற்படும் இடர்களை தவிர்க்க யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வாட்ஸ்ஆப் நிறுவனமும் இந்தியப் பயனாளிகளுக்கு மட்டும் ஸ்டேட்டஸின் நேர அளவை சுமார் 15விநாடிகளாக குறைத்தது. பின்பு கொரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க மெசேஜுகளை ஃபார்வேட் செய்வதிலும் நிபந்தனைகளைக் கொண்டுவந்தது
வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது கொரோனா காலத்தில் நாம் அனைவரும் வீட்டில் அடைந்திருக்கும் சூழ்நிலையில் Together at home என்னும் ஸ்டிக்கர் பேக்கை அறிமுகம் செய்துள்ளது. அதாவது வீட்டில் இருக்கும் வேளையில் நேர்மறையான எண்ணங்களுடன் இருக்கவும் இப்பேரிடர் காலத்திலிருந்து சீக்கிரம் மீண்டு வருவோம் என்ற உலக சுகாதார அமைப்புடன் இணைந்து இந்த ஸ்டிக்கர் பேக்கை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.
குறிப்பாக இந்த ஸ்டிக்கர் பேக்கில் சமூக விலகலை ஊக்குவிக்கும் வண்ணம் ஹைஃபை, ஒகே,கை கழுவுதல், வீட்டில் இருத்தல்,வீட்டில் இருந்தே பணி புரிதல் போன்ற பல்வேறு அருமையான ஸ்டிக்கர் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த புதிய ஸ்டிக்கர் பேக் ஆனது வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டில் இடம்பெற்றுள்ளது, அப்டேட் செய்த உடன் சேட் பாக்ஸில் உள்ள ஸ்டிக்கர் ஆப்ஷன் சென்று `Together at home' என்னும் இந்த பேக்கை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த ஸ்டிக்கர்கள் பிரெஞ்சு, இந்தி, அரபு முதலிய பத்து மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்ட உரைகளில் பயனாளிகள் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக