சீனாவில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் சிலர் வழக்கத்திற்கு மாறாக கருப்பாக மாறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் மாபெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் சீனா ஓரளவு இதை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஆனாலும் சமீக காலமாக சீனாவின் சில பகுதிகளில் புதிதாக கொரோனா தொற்று ஏற்படுவதும், கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது. மேலும் கொரோனா மருத்துவம் செய்த மருத்துவர்களுக்கும் கொரோனா தொற்று உண்டாகி வருகிறது.
சீனாவில் கொரோனா மருத்துவம் பார்த்த மருத்துவர்களான யீ ஃபென் மற்றும் ஹூ விபெங் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர் சிகிச்சை அளித்தும் அவர்களுக்கு கொரோனா தாக்கம் அதிகரித்ததால் அவசர சிகிச்சை பகுதிக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர்கள் உடல் நிறம் மெல்ல கருப்பாக மாற தொடங்கியது சக மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருந்துகளின் அவர்கள் மீது பக்க விளைவை ஏற்படுத்துகின்றனவா என்பது குறித்து ஆராயப்பட்ட நிலையில், கொரொனா வைரஸால் கல்லீரலில் ஏற்பட்ட பாதிப்பின் விளைவாகவே அவர்கள் நிறம் மாற்றமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக