சாம்சங் நிறுவனம் விரைவில் 600 மெகா பிக்சல் கொண்ட கேமரா சென்சார்களை அறிமுகப்படுத்தக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனம் பிக்சல் பைனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த புதிய 600 மெகா பிக்சல் கேமரா சென்சார்களை உருவாக்கி வருகிறது. உண்மையில் இந்த கேமரா சென்சார்கள் மனித கண்ணின் வரம்பை உடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித கண்களை மிஞ்சும் இந்த 600 மெகா பிக்சல் கேமரா சென்சார் பற்றிய கூடுதல் விபரஞாளை பார்க்கலாம்.
சாம்சங் நிறுவனத்தின் 600 மெகா பிக்சல் கேமரா சென்சார்
சாம்சங் நிறுவனம் பிக்சல் பைனிங் தொழில்நுட்பத்தின் மூலம் புதிய சாத்தியக்கூறுகளை உருவாக்கி வருகிறது. சமீபத்திய தகவலின் படி, சாம்சங் அதன் எதிர்கால ஸ்மார்ட்போன்களில் 600 மெகா பிக்சல் கேமரா சென்சார்களை அறிமுகம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் ஏற்கனவே அதன் சமீபத்திய ஸ்மார்ட்போனில் 108MP கேமராவை அறிமுகப்படுத்தி 100MP என்ற வரம்பை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி S20 அல்ட்ரா
சாம்சங் கேலக்ஸி S20 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் தனது 108 மெகா பிக்சல் கொண்ட கேமரா சென்சார்களை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங்கின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 3 × 3 பிக்சல் பைனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அதிக ஒளியை ஈர்க்கும் குறைந்த ஒளி அமைப்புகளால் ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வாக அமைந்திருக்கிறது. சாம்சங் நிறுவனம் அதன் எதிர்கால தயாரிப்புகளில் இதே தொழில்நுட்பத்தை மேம்படுத்திப் பயன்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மனித கண் வரம்பை உடைக்கும் முயற்சியில் சாம்சங்சாம்சங்கின் மூத்த வணிகக் குழுவின் தலைவரான யோங்கின் பார்க் வெளிப்படுத்திய தகவல்களின்படி, மனித கண்களால் சுமார் 500 மெகா பிக்சல்கள் தீர்மானத்தை வேறுபடுத்தி அறிய முடியும், இது தற்போதைய கேமராவின் தீர்மானம் மற்றும் முதன்மை ஸ்மார்ட்போன் தீர்மானங்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. மனித கண்களுடன் சாம்சங் சென்சாரை ஒப்பிட்டுப்பார்க்கையில் இந்த சென்சார்கள் மனித கண்களை மிஞ்சிவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது.
600 மெகா பிக்சல் தீர்மானம்
சாம்சங், தற்பொழுது 600 மெகா பிக்சல் தீர்மானம் கொண்ட கேமரா சென்சார்களை உருவாக்கும் பணியில் முழு முயற்சியுடன் ஈடுபட்டுள்ளது, இது மனிதனின் கண் வரம்பை மிஞ்சும் என்று மூத்த வணிகக் குழுவின் தலைவரான யோங்கின் பார்க் கூறியுள்ளார். மேலும், சாம்சங் உருவாக்கி வரும் 600 மெகா பிக்சல் கேமரா சென்சார்கள் மிக விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
64 மெகா பிக்சலில் இருந்து 108 மெகா பிக்சலுக்கு தாவிய சாம்சங்சாம்சங் நிறுவனம் கடந்த மே 2019ம் ஆண்டில், தனது 64 எம்.பி கேமரா சென்சாரை அறிமுகப்படுத்தியது. இந்த சென்சார்கள் 2 × 2 பிக்சல் பைனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 64 மெகா பிக்சல் கேமரா சென்சார் அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, சாம்சங் 108 எம்பி கேமரா சென்சாரை சந்தையில் அறிமுகம் செய்தது.
108 மெகா பிக்சல் சென்சாருக்கு மாற வெறும் 6 மாதம் தான்
குறைந்த ஒளி அல்லது இருண்ட இடத்தில் அதிக சிறந்த ஒளியை ஈர்க்கும் சக்திவாய்ந்த சென்சார்களை சாம்சங் ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்தது. தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் நிறுவனம் 64 மெகா பிக்சல் சென்சார் தீர்மானத்திலிருந்து 108 மெகா பிக்சல் கொண்ட சென்சார்களுக்கு முன்னேற வெறும் ஆறு மாத காலமே எடுத்ததால், சாம்சங் தற்பொழுது உருவாக்கி வரும் 600 எம்.பி கேமரா சென்சார்கள் சந்தையில் அறிமுகமாக நீண்ட காலம் எடுக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன் மட்டுமின்றி வெவ்வேறு பயன்பாட்டில் 600 மெகா பிக்சல்
சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி வெவ்வேறு பயன்பாட்டில் தனது 600 மெகா பிக்சல் கேமரா சென்சார்களை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. சாம்சங் செய்தியாளர் வெளியிட்டுள்ள பதிவின் படி, சாம்சங் தொடர்ந்து இமேஜ் சென்சார்களில் செயல்பட்டு வருகிறது.
பிக்சல் பைனிங் தொழில்நுட்பத்தில் முன்னேறும் சாம்சங்ஆனால், ஸ்மார்ட்போன் துறையில் இமேஜ் சென்சர்களில் பயன்பாடு வரையறுக்கப்பட்டுள்ளது. இதனால், சாம்சங் பிக்சல் பைனிங் தொழில்நுட்பத்தில் முடிவற்ற சாத்தியங்களை உருவாக்கும் பணியில் சாம்சங் நிறுவனம் தற்பொழுது ஈடுபட்டுள்ளது. எதிர்காலத்தில் கைக்கு அடக்கமான சாதனைகளில் இருக்கும் கேமரா சென்சார்கள் மனித கண்களை மிஞ்சும் என்பதில் சந்தேகமில்லை.
சாம்சங் முன்னணி
அதேபோல், சாம்சங் இமேஜ் சென்சார்களின் நோக்கத்தை விரிவுபடுத்தி ட்ரோன்ஸ், தன்னாட்சி வாகனங்கள் மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி) சாதனங்கள் போன்ற பல்வேறு பயன்பாடுகளில் பயன்படுத்தவும் திட்டம் தீட்டிவருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய பிக்சல், உயர் தெளிவுத்திறன் கொண்ட சென்சார்களை உருவாக்குவதில் சாம்சங் முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக