நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் இந்த நிலையிலும் வீட்டை விட்டு ஓடிப் போய் தனது காதலனை கோவிலில் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது
திருச்சி சிந்தாமணி நகரைச் சேர்ந்தவர் வினோத் என்ற 25 வயது வாலிபரை ஜீவிதா என்ற கல்லூரி பெண் காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில் இந்த காதலுக்கு ஜீவிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதால் ஜீவிதா பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
மேலும் ஜீவிதாவுக்கு மாப்பிள்ளையும் பார்க்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளதாகவும், ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் ஜீவிதா திருமணத்தை நடத்த அவரது பெற்றோர்கள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஜீவிதா தனது தோழி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு தனது காதலர் வினோத்தை சந்தித்து திருமணம் செய்து கொள்வது குறித்து பேசியுள்ளார்
ஊரடங்கு முடிந்தால் தனக்கு பெற்றோர்கள் திருமணம் செய்துவிடுவார்கள் என்று கூறி உடனடியாக வினோத்திடம் சென்று அவரை அழைத்து கொண்டுஅருகிலுள்ள அம்மன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் இந்த திருமணத்திற்கு வினோத் தரப்பினர் மட்டும் கலந்து கொண்டதாக தெரிகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக