இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,396 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 381 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மக்கள் கொரோனாவா பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதனால், மக்கள் பொழுது போக்குவதற்காக , வீடியோகேம், யூடியூப் படம், அமேசான் பிரைம் ஆகியவற்றைப் பார்த்து, ஆகியவற்றைப் பார்த்து, வருகின்றனர்.
இந்நிலையில்,குஜராத் மாநிலத்தில் ஒருநபர் ஊரடங்கு காலத்தில் தன் நண்பர்களை சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது, அவரது மனைவி வீட்டிலேயே இருங்கள் எனக்கூறி, இருவரும் ஆன்லைனில் லூடோ கிங் என்ற கேமை விளையாடியுள்ளனர்.
அதில், மூன்று சுற்றிலும் மனைவியிடம் தோற்றதால், விரக்தி அடைந்த கணவர், அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த பெண்ணை அருகில் உள்ளோர் மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு சென்றனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக