ஆதரவற்றவர்களுக்கு தானே பிரியாணி செய்து கொடுத்த காமெடி நடிகர் இமான் அண்ணாசி.
இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிற நிலையில், கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருமாதகாலமாக வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் ஏழை, எளிய மக்கள் உணவின்றி தவித்து வருகிறனர்.
இந்நிலையில், பிரபலங்கள், திரைப்பட நடிகர்கள் என அனைவரும் தங்களால் இயன்ற நிதி உதவி மற்றும் பொருளுதவி செய்து வருகின்றனர். அந்தவகையில், தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான இமான் அண்ணாச்சி ஆதரவற்ற மக்களுக்கு தானே பிரியாணி சமைத்துக் கொடுக்கும் வீீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக