கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டதை அடுத்து தற்போது சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தவும் கால அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில் தற்போது அது ஜூன் 30ஆக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்த உத்தரவை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மூன்று மாத கால அவகாசத்திற்கு எந்த வித அபராதமும் விதிக்கப்படாது எனவும் தமிழக அரசு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது
இருப்பினும் இந்த ஆண்டு மட்டும் சொத்து வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள்கள் பொதுமக்கள் தரப்பில் இருந்து விடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக