Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 27 ஏப்ரல், 2020

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள்: தமிழகம் முதலிடம்!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள அதேசமயம் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனினும் இறப்பு எண்ணிக்கையை விட பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்தியாவிலேயே கொரோனாவிலிருந்து வேகமாக மீண்டு வரும் மாநிலமாக தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1755 ஆக உள்ள நிலையில் 866 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

இரண்டாம் இடத்தில் உள்ள டெல்லியில் 857 பேரும், மகாராஷ்டிராவில் 840 பேரும் குணமடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக