ஆனால் இந்த லாக்டவுன் நேரத்திலும் எப்படி பணத்தினை கொள்ளையடிப்பது என யோசித்து செயல்பட்டு வருகிறது ஒரு குழு.
அதிலும் ஐடி துறைகளில் தலையாய பிரச்சனையாக கருதப்படும் சைபர் தாக்குதல், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.
இணைய உலகம் என்பது உள்ளங்களையில் உலகமே இருப்பது போல என்பார்கள். அந்த வகையில் லாக்டவுன் இருந்தால் என்ன? கொரோனா வந்தால் எங்களுக்கு என்ன? என்று தங்களது கடமையை இந்த நெருக்கடி நேரத்திலும் ஆரம்பித்துள்ளனர் இணைய ஹேக்கர்கள்.
காக்னிசண்டில் ஹேக்கர்கள் கைவரிசை
அதுவும் கொரோனாவால் வேலையின்றி முடங்கி கிடக்கும் இந்த நேரத்திலும் துரிதமாக கண்விழித்து வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறது அந்தகுழு. லாக்டவுனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தங்களின் கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளனர்சைபர் திருடர்கள்.
உலகின் மிகப்பெரிய ஐடி சேவையினை வழங்கி வரும் நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனத்திலேயே கைவைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கும் பாதிப்பு
அதுவும் ransomware என்ற கொடிய தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வைரஸினால் அதன் வாடிக்கையாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் இது குறித்து வெளியான அறிக்கையில் ஏறக்குறைய 3 லட்சம் ஊழியர்களைக் கொண்ட இந்த நிறுவனத்தில், Maze ransomware குழுவால் தாக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சட்ட அமலாக்க அதிகாரிகளை ஈடுபடுத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தீமை விளைவிக்கும் வைரஸ்
சரி அது என்ன ரான்சம்வேர்? இதற்காக உலகளவில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனம் எதற்காக பயப்பட வேண்டும். பொதுவாக இந்த ரான்சம்வேர்கள் கணினியைத் தாக்கி அதில் தீங்கு ஏற்படுத்தும் வகையில் மென்பொருள் மால்வேர் என அழைக்கபப்டும். அதில் அபாயகரமான ஒரு வகைதான் ரான்சம்வேர்.
இப்படித் தான் செயல்படும் இந்த ரான்சம்வேர்
இமெயில் அல்லது இணையத்தின் வழியில் கணினி ஒன்றில் நுழைந்ததும் அதன் ஒட்டுமொத்தத் தகவல்களையும் லாக் செய்துவிடும். இந்த ரான்சம்வேர் தகவல்கள் அனைத்தும் பயணர்களால் பின் பயன்படுத்த முடியாது.
ஆக பயணர்கள் மீண்டும் பயன்படுத்த வேண்டு என்றால் அதற்கு பணம் செலுத்த ரான்சம்வேர் எச்சரிக்கும். அது மட்டும் அல்ல குறிப்பிட்ட காலத்துக்குள் பணத்தினை செலுத்தாவிட்டால், டேட்டாவை அழித்து விடுவதாக அல்லது அதனை இணையத்தில் பரப்பி விடுவதாகவும் கூறுவதுண்டு.
தீவிர பாதுகாப்பு நடவடிக்கை
பொதுவாக இந்த ரான்சம்வேர்கள் அதிகமாக மெயில்கள் மூலமாக பரவ வாய்ப்புள்ளது. ஆக இப்படி ஒரு பிரச்சனையில் தான் தற்போது காக்னிசண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளதாக லைவ் மிண்ட் செய்திகள் கூறுகின்றன.
அதுமட்டும் அல்ல தற்போது அதனை சரிசெய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக