Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 20 ஏப்ரல், 2020

சீனாவின் ஆதிக்கம் இனி இந்தியாவில் குறையும்.. புதிய முதலீடுகளும் குறையும்.. செக் வைத்த இந்தியா..!

பிரச்சனை
உலக வல்லரசு நாடுகளே கொரோனாவிற்கு பயந்து என்ன முடங்கி போயுள்ள நாடுகளுக்கு மத்தியில், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் என்ன செய்யப்போகிறதோ? தெரியவில்லை. இப்படி பல கேள்விகள் நமக்குள் எழாமல் இல்லை.

இதற்கு சரியான உதாரணம் தான், ஹெச்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்தில் தனது பங்கு விகிதத்தினை அதிகரித்தது சீனாவின் மக்கள் வங்கி.

அதிகரித்து வரும் முதலீடு

இப்படி நாடே கொரோனா ரணகளத்தில் சிக்கித் தவித்து வந்தாலும், சீனாவின் ஆதிக்கம் மட்டும் இன்னும் குறையவில்லை எனலாம். ஏனெனில் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவில் சீனா நிறுவனங்கள், சீனாவின் மக்கள் வங்கி என பலரும் முதலீடுகளை அதிகரித்து வருகின்றன.

ஸ்டார்டப்களில் முதலீடு செய்யும் சீனா ஜாம்பவான்கள்

ஏற்கனவே கொரோனா பாதிப்பு காரணமாக உலக நாடுகள் முழுவதும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பினை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் சீனாவின் சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா, மற்றும் டென்சென்ட் ஆகியவை இந்தியா ஸ்டார்டப் நிறுவங்களில் முதலீடு செய்து வருகிறது. அதுவும் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்து வருகின்றன.

ஆனால் தற்போது சீனாவின் Foreign Direct Investment அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையில் சிறிது மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளினால் இனி புதிய முதலீடுகள் வரத்தானது குறைய வாய்ப்புள்ளது. அது சீனா மட்டும் அல்ல மற்ற நாடுகளில் இருந்தும் முதலீடுகள் குறையலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இனி முதலீடு செய்யப்படும் போது அரசின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதால், இது சற்று குறையவே வாய்ப்புள்ளது.

எதற்காக இந்த திருத்தம்

இது குறித்து வெளியான அறிக்கையில், கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை, வெளிநாட்டு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டு, அன்னிய நேரடி முதலீடு விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அண்மையில் சில சீன நிறுவனங்கள், திறந்த வெளி சந்தை கொள்முதல் முறையில், இந்திய நிறுவன பங்குகளை வாங்கியதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன இந்த நிலையில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதுமட்டும் அல்ல அன்னிய நேரடி முதலீடு விதிகளின் படி, இந்திய எல்லையை ஒட்டியுள்ள எந்த வெளிநாடுகளும், நேரடி முதலீடு செய்ய முடியாது என்றும், மத்திய அரசு வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றியே முதலீடு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இதுபோன்ற கட்டுப்பாடுகள் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திற்கு மட்டுமே இருந்த நிலையில், தற்போது சீனாவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடுமையான கட்டுபாடு

மேலும் இந்திய நிறுவன உரிமைகளை மாற்றம் செய்வதற்கும் இந்திய அரசின் அனுமதி அவசியம் எனவும் அந்நிய நேரடி முதலீடு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 1.01% மதிப்புடைய ஹெச்.டி.எஃப்.சி பங்குகளை சீனா வாங்கிய நிலையில் இதுபோன்ற சில கடுமையான கட்டுப்பாடுகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரச்சனை தான்

சீனா முதலீட்டாளர்களை கொண்ட சில இந்தியாவின் சிறந்த இந்திய தொழில் னுட்ப நிறுவனங்களான பேடிஎம், ஓலா, பிக்பாஸ்கெட், பைஜூஸ், டீர்ம்11 மற்றும் மேக் மை டிரிப் என இன்னும் பல நிறுவனங்கள் இதில் அடங்கும். தற்போதுள்ள நிலையில் இந்த நிறுவனங்களில் மேற்கொண்ட முதலீட்டாளர்கள் எந்தவொரு புதிய முதலீடுகளும் கூடுதல் பரிசோதனையை எதிர்கொள்ள கூடும்.

சிக்கல் தான்

இப்படியாக நாடு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கும் அதே வேளையில் புதிய முதலீடுகள் அவசியம் தான் என்றாலும், முழுக்க முழுக்க அண்டை நாடுகளை சார்ந்திருப்பதை குறிப்பாக, சீனாவினை சார்ந்திருப்பதை குறைக்க அரசு இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கலாம் என்று கூறப்பட்டாலும், நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது இது நல்ல விஷயம் தான் என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக