இந்த நிலையில் முதல் முறையாக லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, பல விமான நிறுவனங்கள் சம்பள குறைப்பு, பணி நீக்கம் என அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வந்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், மீண்டும் அதிரடியாக நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
சம்பளம் குறைப்பு
ஏற்கனவே ஸ்பெஸ்ஜெட் நிறுவனம், தனது அனைத்து ஊழியர்களின் 10 -30% ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் இது அப்போது அதிகபட்சமாக ஊழியர்களுக்கு 30% வரை ஊதியத்தினை குறைக்க, இழப்பீட்டை குறைக்க தேர்வு செய்துள்ளதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சம்பளத்தினை குறைக்க முடிவு
இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது ஊழியர்களில் 50,000 ரூபாய்க்கு அதிகமாக சம்பளம் வாங்குபவர்களில் சுழற்சி அடிப்படையில் ஊதியமின்றி விடுப்பில் அனுப்ப முடிவு செய்துள்ளதாக லைவ் மிண்டில் வெளியான செய்திகள் வெளியாகியுள்ளன.
வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே ஊதியம்
மேலும் ஏப்ரல் மாதத்தில் அவர்கள் வேலை செய்த நாட்களுக்கு மட்டும் ஊதியம் கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆக கொரோனாவின் தாக்கத்தினால் பரவுவதை கருத்தில் கொண்டு, இப்படி ஒரு நடவடிக்கையினை அரசு எடுத்திருந்தாலும், பல நிறுவனங்கள் இப்படி ஒரு நடவடிக்கையினை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கோஏர் நிறுவனம்
முன்னாதாக கோஏர் நிறுவனம் தனது ஊழியர்களில் பெரும்பான்மையோரினை மே 3 வரை ஊதியமின்றி விடுப்பில் செல்லுமாறு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியது. ஏனெனில் லாக்டவுன் முடியும் வரை தனது முழு சேவையினையும் ரத்து செய்துள்ள நிலையில், இப்படி ஒரு அதிரடியான முடிவினை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இன்னும் பல நிறுவனங்களும் தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக