Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 20 ஏப்ரல், 2020

மிரட்டலாக வருகிறது KGF- 2 டீசர் ..? எப்போம் தெரியுமா..?

கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் அதிரடி சண்டை காட்சிகள் கொண்ட கேங் ஸ்டார் படமாக வெளிவந்த திரைப்படம் கே.ஜி.எஃப். இந்த படம் மக்களுக்கு மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனையும் செய்தது, மேலும் இந்த படத்தின் மூலம் நடிகர் யாஷ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். 

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிவருகிறது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது , அதனை தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம்  லுக் போஸ்டருடன்  ரிலீஸ் தேதியும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் படத்தின் படக்குழுவிலுள்ள ஒருவர் அட்டகாசமான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது அது என்னவென்றால் கே.ஜி.எஃப்-2 டீசர்  எப்போது வேணாலும் வரலாம் என்று கூறியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக