Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 20 ஏப்ரல், 2020

தல "61" அட்டகாசமான கூட்டணி..! வெறித்தனமான அப்டேட்

நடிகர் அஜித் தற்பொழுது எச்.வினோத் இயக்கத்தில் அவரது 60வது திரைப்படமான வலிமை படத்தில் நடிக்கவுள்ளார், படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸால் நிறுத்து வைக்கப்பட்டுள்ளது, மேலும் படத்தின் படப்பிடிப்பு 60% முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.  

மேலும் கொரோனா வைரஸ் முடிந்தவுடன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது மேலும் மே 1அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வலிமை அப்டேட் வர அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த வலிமை திரைப்படம் ஒரு புறம் இருக்க, அடுத்ததாக அஜித் 61வது படத்தை பற்றி செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது , அந்த வகையில் தற்பொழுது கிடைத்திற்ககூடிய தகவல், அஜித்தின் 61வது படத்தை இயக்குனர் சுதாகொங்கரா இயக்கப்போவதாகவும் அந்த படத்தை தூங்காவனம், தனுசு ராசி நேயர்களே , போன்ற திரைப்படங்களை தயாரித்து கோகுலம் பிலீம் ஸ்டூடியோ தயாரிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது, இதற்கான அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!