ஆனால் பேடிஎம் நிறுவனம் மட்டும், தன் கம்பெனியில் சுமார் 250 கோடி ரூபாய்க்கு போனஸ் கொடுக்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறது.
அதோடு புதிதாக ஆட்களையும் பல்வேறு பணிகளுக்கு வேலைக்கு எடுக்க இருக்கிறார்களாம். எப்படி?
போனஸ்
சிறப்பாகச் செயல்படும் ஊழியர்களுக்கு, பேடிஎம், போனஸ் தொகையை பணமாகக் கொடுக்கப் போவதில்லையாம். Employee Stock Ownership Plans (Esops) என்று சொல்லப்படும் முறையில் 250 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளாகக் கொடுக்கப் போகிறார்களாம். இதனால் பல தரப்பட்ட ஊழியர்களும் பேடிஎம் நிறுவனத்தின் ஒரு அங்கமாவார்கள் என்கிற கம்பெனி.
500 பேர் வேலை
பேடிஎம் நிறுவனம் தன் பல்வேறு முக்கியமான ப்ராடெக்ட்களுக்கும், டெக்னாலஜி செயல்பாடுகளுக்கும் சுமார் 500 பேரை புதிதாக வேலைக்கு எடுக்கப் போகிறார்களாம். ஏற்கனவே பேடிஎம் நிறுவனத்தில் சுமாராக 5,000 பேர் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக இன்சூரன்ஸ், கடன் மற்றும் பேடிஎம் மணி போன்ற துறைகளில் வேலைக்கு எடுக்கப் போகிறார்களாம்.
ஹெச் ஆர்
அதோடு, குறைந்தபட்சம், அடுத்த இரண்டு மாதங்களுக்காவது, பேடிஎம் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை, வேலையில் இருந்து நீக்கப் போவதில்லை என்பதையும் சொல்லி இருக்கிறார் பேடிஎம் நிறுவனத்தின் முதன்மை மனித வள அதிகாரி ரோஹித் தாகூர். ஆக லே ஆஃப் இல்லை, ஆனால் போனஸ் உண்டு என்பது நல்ல செய்தி!
மதிப்பு
பேடிஎம் நிறுவனத்தின் மதிப்பு, கடந்த வருடம் நவம்பரில் T Rowe Price, Ant Financial, Soft-Bank போன்ற முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடு பெற்ற போது சுமாராக 16 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மதிப்பீடுகள் ஏற ஏற, ஊழியர்களுக்கு கொடுத்த பங்குகளின் மதிப்பும் ஏறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக