Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

சீனா வேண்டாம்.. இந்தியா தான் வேணும்..அடம் பிடிக்கும் 1000 நிறுவனங்கள்.. அதிகரிக்கும் மோதல்!

சீனா
கொரோனாவின் தாக்கம் உலகம் முழுக்க பரவி வருகின்ற நிலையில் மறுபுறம், சீனாவினால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பல நாடுகள் கூறி வருகின்றன.

இது ஒருபுறம் போயிக் கொண்டிருந்தாலும், சீனா தற்போது பொருளாதார ரீதியாக முன்னேற பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

சீனா தான் காரணம்

இதற்கிடையில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கொரோனா என்னும் கொடிய அரக்கனை சீனா நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். ஆனால் சீனா அவ்வாறு செய்யவில்லை. இதெல்லாவற்றையும் விட இந்த கொடிய வைரஸினை சீனா வேண்டுமென்றே பரப்பி இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் அவ்வாறு சீனா செய்தது உறுதியானால் சீன மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

வைரஸ் இப்படித் தான் பரவல்

அதுமட்டும் அல்ல சீனாவின் வுகான் மாகாணத்தில் உள்ள வைரலாஜி ஆராய்ச்சி மையத்தில், இந்த வைரஸ் உருவாகி இருக்கலாம். அல்லது அங்கிருந்து பரவி இருக்கலாம் என்று கூறும் டிரம்ப், இதற்காக ஒரு தனி குழுவையும் விசாரிக்க அனுப்ப உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் சீனா தொடர்ந்து அந்த குற்ற சாட்டினை மறுத்து வருகிறது.

ஆனால் இந்த எச்சரிக்கையும் கூட, ஒரு விதத்தில் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது எனலாம். ஏனெனில் சில தினங்களுக்கு முன்பு தான், இனி சீனா முதலீடு செய்ய மத்திய அரசின் அனுமதி வழங்கித் தான் முதலீடு செய்ய முடியும் என்றும் அறிவித்தது இந்திய அரசு. இது சீனா இந்தியாவில் உள்ள பெரிய பெரிய நிறுவங்களை வளைத்து போடுவதில் இருந்து தவிர்க்க முடியும் என்றும் கூறப்பட்டது.

இந்தியா அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்

ஆனால் சீனாவோ இந்தியா முதலீடு செய்யும் எல்லா நாடுகளையும் இந்தியா சமமாக நடத்த வேண்டும். இந்திய உலக வர்த்தக அமைப்பின் வழிகாட்டுதல்களை மீறுகின்றது. சீனா நிறுவனங்கள் சந்தைக் கொள்கைக் அடிப்படையில் தேர்வுகளை செய்கின்றன. சீன முதலீடுகள் இந்திய தொழில்துறையின் வளர்ச்சியினை உந்துகின்றன. ஆக இந்தியா அனைத்து நாடுகளையும் முதலீட்டில் சமமாக நடத்த வேண்டும் என்றும் சீனாவின் தூதரக அதிகாரி ஜி ரோங் கூறியுள்ளார்.

இந்தியாவில் தொடங்க ஆர்வம்

ஆனால் இத்தனை ரணகளத்திலும் நடந்த நல்ல விஷயம் என்னவெனில், கொரோனா வைரஸினைத் தொடர்ந்து, சீனா தனது மிக விருப்பமான 1,000 உற்பத்தி நிறுவனங்களை இழக்க நேரிடலாம். ஏனெனில் சுமார் 1,000 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் பிசினஸ் டுடேவில் வெளியான அறிக்கையின் மூலம் அறிய முடிகிறது.

இந்தியாவிடம் பேச்சு வார்த்தை

அதில் குறைந்த பட்சம் 300 நிறுவனங்கள் தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மொபைல் உற்பத்தி நிறுவனங்கள், ஜவுளி மற்றும் சிந்தடிக் துணி உற்பத்தி உள்ளிட்ட பல வகையான உற்பத்தி நிறுவனங்களும் இதில் அடங்கும் என்றும் அரசின் உயர் மட்ட அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளனசிறந்த மாற்று உற்பத்தி மையம்

அதோடு மேற்கண்ட இந்த நிறுவனங்கள் இந்தியாவை ஒரு மாற்று உற்பத்தி மையமாக காண்கின்றனவாம். இதற்காக அவர்கள் பல்வேறு தரப்பிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதிலும் 1000 நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில், அவற்றில் குறைந்தபட்சம் 300 நிறுவனங்கள் மிக தீவிரமாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவுக்கு மாற்று இந்தியா?

இந்தியா சீனாவுக்கு மாற்று உற்பத்தி இடமாக கருதப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்பு இது குறித்த உண்மைகள் வெளி வரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்தியா ஒரு மாற்று உற்பத்தி இடமாக உருவெடுக்கும். குறிப்பாக ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென் கொரியா போன்ற பல நாடுகள் சீனாவினை அதிகம் நம்பியுள்ளன. ஆனால் தற்போது அவை இந்தியாவுக்கு வர நினைக்கின்றன.

கார்ப்பரேட் வரி குறைப்பு

ஏனெனில் அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் அன்னிய முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாக, கார்ப்பரேட் வரி விகிதத்தினை 25.17% ஆகக் குறைத்தது மத்திய அரசு. அதோடு புதிய உற்பத்தியாளர்களைப் பொறுத்தவரையில், 17% வரி விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இது தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகக் குறைவான வரி என்றும் கூறப்படுகிறது. ஆக இது வெளிநாட்டு முதலீடுகளை எளிதில் ஈர்க்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

செலவினை குறைக்க நடவடிக்கை

உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் உக்கிரம் எடுத்து ஆடி வரும் நிலையில், பல நிறுவனங்கள் செலவினை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆள்குறைப்பு, சம்பள குறைப்பு, உற்பத்தி குறைப்பு, உற்பத்தி ஆலைகளை வேறு இடங்களுக்கு மாற்றுதல், குறிப்பாக சீனாவில் இருந்து மாற்று இடங்களில் மாற்ற நினைக்கின்றன.

சீனா மீது குற்றம்

இதற்கிடையில் கொரோனாவுக்கு காரணம் சீனா தான் என்றும் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். இதற்கிடையில் ஜப்பான் தனது நிறுவனங்களுக்கு சீனாவிலிருந்து உற்பத்தியினை மாற்ற 2 பில்லியன் டாலர் நிதியை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக அதன் பிரதிபலன் இந்தியாவுக்கு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியா கவர்ச்சிகரமான நாடு

பொதுவாகவே இந்தியா வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் கவர்ச்சிகரமான நாடாக திகழ்கிறது. இதன் உள்நாட்டு சந்தை பலமும் சரி, ஏற்றுமதியும் சரி முதலீட்டாளார்களுக்கு ஏதுவானதாக உள்ளது. ஒன்று இந்தியாவின் சந்தை மிகப்பெரியது. மற்றொன்று ஏற்றுமதிக்கு சாத்தியமான மையமாகவும் உள்ளது. குறிப்பாக கடந்த 5 -6 வருடங்களில் மிகவும் சுவாரஸ்யமான அன்னிய நேரடி முதலீட்டு வளர்ச்சியினை இந்தியா பதிவு செய்து வருவதற்கும் இது தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

இங்கு செலவு குறைவு தான்

மேலும் இந்தியாவுக்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையிலான உற்பத்தி செலவுகள் வேறுபாடு சுமார் 10 -12% உள்ளது. ஆக நிறுவனங்கள் இந்தியாவினை நோக்கி படையெடுக்க இதுவும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. எவ்வாறயினும் இந்தியாவின் மிகப்பெரிய சந்தையினை கவர யாருக்கு தான் பிடிக்காது. ஏனெனில் இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இங்கேயே சந்தைப்படுத்த முடியும்.

இந்தியாவில் சலுகை

உதாரணத்திற்கு நீங்கள் வியட்னாமில் மொபைல் தயாரித்தால், அங்கு உள்ளூர் சந்தை என்பது கிடையாது. ஆனால் அங்கிருந்து ஏற்றுமதி மட்டுமே செய்ய முடியும். இதே இந்தியாவில் உள்நாட்டு சந்தை பெரிது. இங்கிருந்து ஏற்றுமதி செய்வதும் அதைவிட எளிது. அதுமட்டும் அல்ல இந்தியா பற்பல சலுகைகளையும் அளித்து வருகிறது. ஆக இந்தியாவுக்கு இந்த கொரோனாவால் நல்ல காலம் காத்திருக்கிறது என்றே கூறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக