பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து 10 சதவீத பங்குகளை வாங்கியது, இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனமும் ஜியோவுடன் கூட்டு சேர்த்து, ஜியோவின் ஆன்லைன் பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து 10 சதவீத பங்குகளை வாங்கியது, இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனமும் ஜியோவுடன் கூட்டு சேர்த்து, ஜியோவின் ஆன்லைன் ஜியோமார்ட் சேவையைத் துவங்குமென்று வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி ஜியோ தற்பொழுது வாட்ஸ்அப் மூலம் தனது ஜியோமார்ட் சேவையைத் துவங்கியுள்ளது. சேவையைத் துவங்குமென்று வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி ஜியோ தற்பொழுது வாட்ஸ்அப் மூலம் தனது ஜியோமார்ட் சேவையைத் துவங்கியுள்ளது.
ஜியோமார்ட் சேவை அறிமுகம்
ஜியோ தனது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள சிறிய கிரானா (மளிகை) கடைகளின் பரந்த வழியமைப்பை அடைய ஜியோமார்ட் சேவையை தற்பொழுது பயன்படுத்தியுள்ளது. புதிய ஜியோமார்ட் சேவைக்காக ஜியோ நிறுவனம் தற்பொழுது வாட்ஸ்அப் பயனர்களுக்கான ஜியோமார்ட் அம்சத்தை வெளியிடத் தொடங்கியுள்ளது, ஆனால், முதற்கட்டமாக மிகச் சிறிய அளவிலான பயனர்களுக்கு மட்டும் இந்த சேவையை தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் விரைவில் நடைமுறைக்கு வர வாய்ப்பு
ஜியோமார்ட் சேவை தற்பொழுது மும்பை பகுதியில் மட்டும் துவங்கப்பட்டுள்ளது, இன்னும் தமிழகத்தில் இந்த சேவை அறிமுகம் செய்யப்படவில்லை என்றாலும் கூட, இந்த சேவையை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ளுங்கள். ஏனென்றால் இந்த சேவை இன்னும் சில வாரங்களில் தமிழகத்திலும் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. தற்பொழுது உள்ள சூழ்நிலையில் இந்த சேவைப்பற்றிய தகவல்களை மக்கள் அறிந்துகொள்வது பின்வரும் வாரங்களில் கைகொடுக்கும்.
நாட்டின் பிற பகுதிகளுக்கு விரைவில் விரிவுபடுத்தப்படும்
தற்பொழுது ஜியோ நிறுவனம் தனது ஜியோமார்ட் சேவையை மும்பையில் உள்ள சில குறிப்பிட்ட பகுதியில் மட்டும் துவங்கியுள்ளது. குறிப்பாக, இந்த சேவை நவி மும்பை, தானே மற்றும் கல்யாண் புறநகர் மும்பை பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனையாளர் மூலம் தந்து சேவையைத் துவங்கியுள்ளது. ஜியோ நிறுவனத்தின் ஜியோமார்ட் சேவை படிப்படியாக நாட்டின் பிற பகுதிகளுக்கு விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.
புதிய முறையற்சி நிச்சயம் வரவேற்கப்படும்
பேஸ்புக் நிறுவனத்துடன் ஜியோ ஒப்பந்தம் செய்த மூன்று நாட்களில் ஜியோமார்ட் சேவையை வாட்ஸ்அப் மூலம் ஜியோ துவங்கியுள்ளதால், வெகு விரைவில் இந்தியாவின் பல பகுதிகளில் இந்த சேவையை ஜியோ துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலத்தில் ஜியோவின் இந்த புதிய புதிய முறையற்சி நிச்சயம் வரவேற்கப்படும் என்று கருதப்படுகிறது.
ஜியோமார்ட் சேவை பயன்படுத்துவது எப்படி?
ஜியோமார்ட்டில் உங்களுக்கான ஆர்டரை நீங்களா பதிவு செய்ய முதலில் பயனர்கள் ஜியோமார்ட் சேவைக்கென்று ஒதுக்கப்பட்ட வாட்ஸ்அப் வணிக எண் ஆனா 88500 08000 என்ற எண்ணை உங்கள் போனில் சேமிக்க வேண்டும்.
வாட்ஸ்அப் எண்ணிற்கு Hi மெசேஜ்
இந்த எண்ணிற்கு 'ஹாய்' என்று மெசேஜ் செய்தால், நிறுவனம் வாடிக்கையாளரின் வாட்ஸ்அப் கணக்கிற்கு ஒரு லிங்க் இணைப்பை அனுப்பும். இந்த இணைப்பை 30 நிமிடங்களுக்குள் பயனர்கள் பயன்படுத்த வேண்டும், இல்லை என்றால் லிங்க் காலாவதியாகிவிடும். ஜியோமார்ட் சேவையை மீண்டும் பயன்படுத்தப் பயனர் மீண்டும் அதே சாட்டில் 'ஹாய்' என்ற மெசேஜ் அனுப்ப வேண்டும்.
ஜியோமார்ட்டின் லிங்க் இணைப்பு
ஜியோமார்ட் சேவைக்காகப் பயனர்களுக்கு வழங்கப்பட லிங்க் இணைப்பைத் தட்டியதும், அது உங்களை ஜியோமார்ட்டின் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு, அவர்களின் மொபைல் எண், பகுதி, இருப்பிடம், மீதமுள்ள முகவரி மற்றும் ஆர்டர் செய்யும் நபரின் முழு பெயர் ஆகியவை கேட்கப்படும். அதன்பின், பயனர்கள் பொருட்கள் பட்டியலுக்கான தயாரிப்புகளின் பக்கத்திற்கு அனுப்பிவிடப்படுவர்.
வாடிக்கையாளர் கடை விவரங்கள்
தேவையான போர்டுகளை பயனர் தேர்ந்தெடுத்த பிறகு, ஜியோமார்ட் உள்ளூர் மளிகைக் கடைகளுடன் பயனரின் பட்டியலை வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொள்ளும். பயனரின் பட்டியலில் உள்ள பொருட்களைக் கடைக்காரர் தயார் செய்ததும் வாடிக்கையாளர் கடை விவரங்களுடன் ஒரு மெசேஜ் அனுப்பப்படும்.
பொருட்களுக்கான கட்டணம்
ஜியோமார்ட் சேவை தற்பொழுது முதற்கட்டமாக சில பகுதிகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர் வாட்ஸ்அப் எண்ணிற்கு வந்த மெசேஜ் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் மளிகைக் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். ஜியோமார்ட் சேவை உங்கள் உள்ள கடைகளை மட்டுமே தேர்வு செய்யும் என்பதால் நீண்ட தூரம் நீங்கள் செல்ல வேண்டியதில்லை. பொருட்களுக்கான கட்டணம் செலுத்தும் முறை இப்போது வெறும் கேஷ் ஆன் பே முறையில் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக