டிக்-டாக் காதல்
தஞ்சை பகுதியைச் சேர்ந்த பி.எஸ்சி பட்டப்படிப்பை முடித்து வீட்டில் பொழுது போகாமல் டிக்டாக் வீடியோ பயன்படுத்தி வந்திருக்கிறார் அந்த பெண். இவர் டிக்-டாக் மூலம் மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் அறிமுகமாகி பழக்கமாகியுள்ளார். சிறு நாள் பழகியதிலேயே, அந்த பெண்ணிற்கு, இளைஞரின் மீது காதல் வந்துவிட்டது. ஒருதலையாக அந்த இளைஞரிடம் எதுவும் சொல்லாமல் காதல் செய்து வந்திருக்கிறார்.
ஒரு தலையாக மாறிய காதல்
ஒருதலையாகக் காதல் செய்து வந்த பெண், ஒரு கட்டத்தில் அவர் மனதில் உள்ள காதலை அந்த இளைஞர் இடம் போட்டு உடைத்திருக்கிறார். ஆனால், அந்த இளைஞர் அந்த பெண்ணுடன் நட்பு ரீதியாக மட்டுமே பழகியதாகக் கூறி, சிறு தினங்களுக்கு முன்பு டிக்-டாக் பழக்கத்தைக் கைவிட முயன்றதாகத் தெரிகிறது. இருந்தாலும் அந்த பெண், தனது காதலை விட்டுக்கொடுப்பதாக இல்லை.
தஞ்சையிலிருந்து மதுரை நோக்கி நடந்த காதலிதற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் கடந்த வாரம் அந்த பெண், மதுரை உள்ள காதலனைப் பார்ப்பதற்காகத் தஞ்சையிலிருந்து பைபாஸ் ரோடு வழியாக மதுரை நோக்கி நடக்கத் துவங்கியிருக்கிறார். இதை டிக்-டாக் மூலம் வீடியோ பதிவாகும் அப்பெண் வெளியிட்டிருக்கிறார். தஞ்சையிலிருந்து மதுரைக்கு இடையிலான தூரம் சுமார் 200 கிலோ மீட்டர் ஆகும்.
காதல் கதையைக் கூறி வீடியோ
டிக்டாக் இல் உள்ள மற்ற பயனர்களுக்குத் தனது காதல் கதையைக் கூறி தனியாக மதுரையை நோக்கி நடந்துவருவதாகவும், சாலையில் நடந்து வரும் வீடியோ காட்சிகளையும் அவர் தனது டிக்டாக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுமட்டுமின்றி, காதல் பாடல்களைப் பாடி, தற்போது எந்த இடத்தில் வருகிறார் என்பதையும் வீடியோ பதிவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பெரும் பரபரப்பையே ஏற்படுத்திவிட்டார்.
கடுப்பான நெட்டிசன்ஸ்
இந்நிலையில் நேற்று மதியம் அந்த பெண் மதுரை மாவட்ட எல்லைக்குள் நுழையும் பொழுது தனது காதலரின் பெயரைக் குறிப்பிட்டுக் கூறிய தன்னை மோட்டார் சைக்கிளில் வந்து அழைத்துச் செல்லும்படி இன்னொரு வீடியோவையும் பதிவு செய்துவிட்டர். வலைத்தளத்தில் அந்த காதலனைத் திட்டியும், இந்த பெண்ணின் செயலுக்கு அறிவுரை கூறியும் பலர் கமெண்ட் செய்துள்ளனர். இது தொடர்பாகச் சிலர் போலீசில் புகார் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக