சியோமி நிறுவனம் வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதி நடக்கும் ஒரு ஆன்லைன் நிகழ்வில் அதன் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் சியோமி ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் Bureau of Indian Standards (பிஐஎஸ்) சான்றிதழை பெற்றுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு அவ்வளவு தூரத்தில் இல்லை என்பதை நம்மால் அறிய முடிகிறது.
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் பிஐஎஸ் சான்றிதழை முதலில் கண்டறிந்தார் டிப்ஸ்டர் முகுல் சர்மா ஆவார். இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல் நம்பர் M2003J15SI என்கிற பெயரின் கீழ் BIS சான்றிதழைப் பெற்றுள்ளது.
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் ரெட்மி 10 எக்ஸ் என்கிற பெயரின் கீழ் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 9 சமீபத்தில் சீன தொலைதொடர்பு ஒழுங்குமுறை நிறுவனமான TENAA சான்றிழையும் பெற்றது என்பதும் குறிப்பிடத்தாக்கது.
TENAA பட்டியலின் படி, ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆனது 1080 x 2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.53 அங்குல முழு எச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும், மேலும் இது 2GHz மீடியா டெக் ஹீலியோ ஜி 85 ஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படும்.
இது மூன்று ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கும்: 3 ஜிபி + 32 ஜிபி, 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி. இதன் ஸ்டோரேஜ் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடியதாகவும் இருக்கும்.
ரெட்மி நோட் 9 குறைந்தபட்சம் 4,920 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கும். மேலும் 18W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். இது MIUI 11 உடன் சமீபத்திய Android 10 OS உடன் அனுப்பப்படும்.
கேமரத்துறையை பொறுத்தவரை, ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் சதுர வடிவ க்வாட் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். கேமரா அமைப்பில் 48MP மெயின் கேமரா, 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகையவைகள் இடம்பெறும். இந்த க்வாட்-கேமரா அமைப்பின் அடியில் கைரேகை சென்சார் இருக்கும்.
முன்பக்கத்தை பொறுத்தவரை, ஒரு 13 எம்பி செல்பீ கேமராவைக் கொண்டிருக்கும். அளவீட்டில் இந்த ஸ்மார்ட்போன் 162.3 x 77.2 x 8.9 மிமீ மற்றும் 198 கிராம் எடையும் கொண்டிருக்கலாம். இது ரூ.11,190 என்கிற விலை நிர்ணயத்தின் கீழ் இந்தியாவில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொபைல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக