பிஎஸ்-6 பற்றி Mahindra Scorpio SUV மாடலின் வெவ்வேறு வேரியன்ட்களின் விலை பற்றிய புதிய தகவல்களும், அந்த வேரியண்ட்களுக்கான வித்தியாசங்களும் இதோ...
மத்திய அரசு வாகன மாசு கட்டுப்பாட்டு விதிகளின் படி பிஎஸ்-6 இன்ஜின் பொருத்திய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி (Mahindra Scorpio SUV) மாடலின் ஆரம்ப விலை ரூ.12.56 லட்சம் - ரூ.16.18 லட்சமாக (சென்னை எக்ஸ் ஷோரூம் விலை) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது விற்பனையில் களமிறக்கப்பட்டுள்ள Mahindra Scorpio SUV மாடலில் 2.2 mHawk திறன் கொண்ட டீசல் என்ஜினானது பிஎஸ்6-க்கு மாற்றப்பட்டு 140hp பவர் மற்றும் 320Nm டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இதில் முதற்கட்ட மாடலான S5-வில் மட்டும் 5ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸூம், மற்ற வேரியண்ட்களில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்கார்பியோ எஸ்.யு.வி அடிப்படை வேரியண்ட்டான S-3 நீக்கப்பட்டுவிட்டது. தற்போது S5, S7, S9 & S11 என நான்கு வகைகளில் Mahindra Scorpio SUV விற்பனையில் களமிறங்கியுள்ளது.
S5 மாடலில் மட்டும் 7 அல்லது 9 இருக்கைகள் கொண்டிருப்பையாகவும், மற்ற வேரியண்டுகளில் 7 அல்லது 8 இருக்கைகள் கொண்டிருப்பையாகவும் உள்ளது. மேலும் இந்தமாடலில், டூயல் ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, ரியர் பார்க்கிங் சென்சார் போன்ற அம்சங்களும் உள்ளது.
Mahindra Scorpio SUV-வின் வெவ்வேறு வேரியன்ட்களின் சென்னை எக்ஸ் ஷோரூம் விலை பட்டியல் இதோ...
S-5 (BS-6) : ரூ.12,56,631/- S-7 (BS-6) : ரூ.14,28,766/- S-9 (BS-6) : ரூ.15,01,812/- S-11 (BS-6) : ரூ.16,18,182/-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக