வோடபோன் ஐடியா சமீபத்தில் நாட்டின் எட்டு வட்டங்களிலிருந்து தனது இரட்டை டேட்டா நன்மை சலுகையை நிறுத்தியுள்ள நிலையில், தற்பொழுது இன்னும் கூடுதலாக 5 வட்டங்களில் தனது இரட்டை டேட்டா நன்மை சலுகையை நிறுத்தியுள்ளது. தொலைத் தொடர்பு சேவை வழங்குநர் நிறுவனமான வோடபோன் ஐடியா இப்போது புதிதாக இரண்டு ப்ரீபெய்டு திட்டங்களான ரூ.399 மற்றும் ரூ.599 திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது.
வோடபோன் ஐடியா முன்னதாக சுமார் 22 தொலைத் தொடர்பு வட்டங்களில் தனது இரட்டை டேட்டா சலுகை நன்மை திட்டங்களை அறிமுகம் செய்து டபுள் நன்மைகளை வழங்கும் சலுகையைத் தொடங்கியது. இப்போது இந்த சலுகையை மற்றொரு 5 தொலைத் தொடர்பு வட்டங்களிலிருந்து வோடபோன் ஐடியா நீக்கம் செய்கிறது. நீக்கம் செய்யப்பட்ட பட்டியலில் தமிழ்நாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டபுள் டேட்டா சலுகை இனி யாருக்கெல்லாம் கிடைக்கும்? யாருக்கெல்லாம் கிடைக்காது?
வோடபோன் இந்தியா தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளபடி, இரட்டை டேட்டா நன்மை சலுகை இனி டெல்லி, மத்திய பிரதேசம், மும்பை, கொல்கத்தா, மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய ஒன்பது வட்டங்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதேபோல், முன்பு பீகார், ஆந்திரா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கோவா, பஞ்சாப், வட கிழக்கு மற்றும் உ.பி. மேற்கு உள்ளிட்ட எட்டு வட்டங்களிலிருந்து இந்த சலுகை சமீபத்தில் தான் நீக்கப்பட்டது.
இப்போது, மீண்டும் இன்னும் கூடுதலாக ஐந்து வட்டங்களில் அதன் இரட்டை தரவு சலுகையை நீக்கியுள்ளது, புதிதாக நீக்கம் செய்யப்பட்டுள்ள பட்டியலில் தமிழ்நாடு உட்பட, இமாச்சலப்பிரதேசம், ஹரியானா, கர்நாடகா மற்றும் உ.பி. கிழக்கு ஆகிய வட்டங்களில் இந்த சலுகை தற்பொழுது நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனுடன், அதன் ரூ.249 ப்ரீபெய்டு திட்டத்திலிருந்து டபுள் டேட்டா சலுகையையும் நீக்கியுள்ளது.
ரூ.399 மற்றும் ரூ.599 ப்ரீபெய்டு திட்டம்
இனி வோடபோன் ஐடியா தனது டபுள் டேட்டா சலுகையைப் புதிதாக அறிமுகம் செய்துள்ள ரூ.399 மற்றும் ரூ.599 ப்ரீபெய்டு திட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கும்படி சில மாற்றங்களைச் செய்துள்ளது. இதன் பொருள் இப்போது வரை இரட்டை தரவு நன்மைகளை வழங்கிக் கொண்டிருந்த ரூ.249 ப்ரீபெய்டு திட்டத்தில் சலுகை இனி இந்த வட்டங்களில் பொருந்தாது என்பதாகும்.
ரூ.599 திட்ட நன்மைகள்
வோடபோன் நிறுவனத்தின் ரூ.599 திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன், தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 3 ஜிபி டேட்டா நன்மை ஆகியவற்றைப் பயனர்களுக்கு வழங்குகிறது.
ரூ.399 திட்ட நன்மைகள்
அதேபோல், வோடாபோனின் ரூ.399 திட்டமும் இதே சலுகைகளை வழங்குகிறது, ஆனால் இதன் வேலிடிட்டி காலம் மட்டும் சற்று குறைவாக 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. இந்த இரண்டு திட்டங்களும் வோடபோன் ப்ளே மற்றும் வோடபோன் வாடிக்கையாளர்களுக்கான ஜீ 5 சந்தாவுடன் வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக