Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 23 ஏப்ரல், 2020

மளிகை கடை அண்ணாச்சிகளை வளைக்க Whatsapp-ஐ கையில் எடுக்கும் ஜியோ! இனி சும்மா கிழி தான்!

ரிலையன்ஸ் ஜியோவின் 100 % பங்குகளை அதன் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் வைத்திருந்தார்கள். ஆனால் அதில் 9.9% பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கி இருக்கிறது. 

ஃபேஸ்புக்கின் துணை நிறுவனங்களின் ஒன்று தான் வாட்ஸப். இப்போது வாட்ஸப்பை வைத்து தன் ரீடெயில் சாம்ராஜ்யத்தை இன்னும் விரிவுபடுத்த இருக்கிறார் முகேஷ் அம்பானி. 

முகேஷ் அம்பானி கருத்து 

ஃபேஸ்புக் நிறுவனத்தை எங்களின் நீண்ட கால கூட்டாளியாக வரவேற்பதில் ரிலையன்ஸில் உள்ள எல்லோரும் பெரிதும் மகிழ்கிறோம். இந்த பார்ட்னர்ஷிப் டீல், இந்தியாவில் டிஜிட்டல் வளர்ச்சியை அதிகப்படுத்தும். அதோடு டிஜிட்டல் சூழலை (Digital Ecosystem) மாற்றவும் உதவும் எனச் சொல்லி இருக்கிறார் அம்பானி. 

பிரதமர் நோக்கம்

 ஜியோ மற்றும் ஃபேஸ்புக்கின் இந்த பார்ட்னர்ஷிப் டீல், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா இலக்கை அடைய உதவும். அதுவும் மிக முக்கிய இரண்டு குறிக் கோள்களான 'மக்கள் வாழ்கையை எளிமையாக்குதல்' மற்றும் 'வியாபாரத்தை எளிமையாகச் செய்தல்' அடைய உதவும் எனச் சொல்லி இருக்கிறர் முகேஷ் அம்பானி. 

மீண்டு வருவோம்

 அதோடு இந்தியா, இந்த கொடூர கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து, குறைந்த காலத்தில் வேகமாக மீண்டு வரும். அப்படி இந்தியப் பொருளாதாரம் மீண்டு வர ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்த பார்ட்னர்ஷிப் டீலும் உதவும் எனச் சொல்லி இருக்கிறார் முகேஷ் அம்பானி. வாட்ஸப் முகேஷ் அம்பானி பேசியது எல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு வியாபாரத்து வருவோம். 

கடந்த ஜனவரி 2020-ல் தான் ரிலையன்ஸ் ஜியோ, மளிகை சாமான்களை டெலிவரி செய்ய 'ஜியோ மார்ட்' என்கிற பெயரில் ஒரு தனி இ காமர்ஸ் நிறுவனத்தைக் கொண்டு வந்தது. நியாபகம் இருக்கா? 

டீல் சிம்பிள்

லோக்கல் வியாபாரிகள், மளிகை கடை அண்ணாச்சிகள், வட இந்தியாவில் கிரானா ஸ்டோர்கள்... என சில்லறை வியாபாரிகள் எல்லாம் அந்த ஜியோ மார்ட்டில் தங்களை பதிந்து கொள்வார்கள். இந்த கடைக்காரர்கள், நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாட்ஸப் மூலமாக தங்கள் கடையில் விற்கும் பொருட்களுக்கு ஆர்டர்களைப் பெறுவார்கள். 

ரிலையன்ஸ் ஜியோ & ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு இடடையிலான டீல் இது தான். 

சிம்பிள்

வியாபாரம் இப்படித் தான் இத்தனை நாள், தங்களை ஆன்லைன் உலகத்தில், இணைத்துக் கொள்ளாத மளிகைக் கடை வியாபாரிகள் இனி, மெல்ல ஜியோ மார்ட் வழியாக நம் ஸ்மார்ட்ஃபோன்களில் எட்டிப் பார்பபர்கள். 

நாம் வாட்ஸப்பில் ஆர்டர் கொடுத்தால் போதும் ஜியோ மார்ட் நிறுவனம், கடைகளில் இருந்து பொருட்களை வாங்கி, ஆர்டர் போட்டவர்களுக்கு டெலிவரி செய்துவிடும். 

சம்பாத்தியம் 

இந்தியாவின் சில்லறை வணிகம் சுமாராக 600 பில்லியன் டாலரைத் தொடும் என்கிறது விக்கிபீடியா. அது இந்திய மதிப்பில் சுமாராக 45 லட்சம் கோடி ரூபாய் வருகிறது. என்றால் நம் முகேஷ் அம்பானி, ஜியோ மார்ட் வழியாக எவ்வளவு சம்பாதிப்பார் என நீங்கள் கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

 FB-க்கு என்ன லாபம்?

எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டு, ஃபேஸ்புக் நிறுவனம் மட்டும் என்ன விரல் சூப்பிக் கொண்டு இருக்குமா? அவர்களுக்கு இந்த டீலில் என்ன லாபம்? என்றால் பயனர்கள் தான் விடை. 

ஆம் இது நாள் வரை வாட்ஸப் பக்கம் கூட வராத பல கோடி இந்தியர்கள், குறிப்பாக வியாபாரிகள் இனி வாட்ஸப்பில் ஆர்டர் எடுக்கவாவது வருவார்கள். எனவே வாட்ஸப்பின் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தான் அவர்களுக்கு இந்த டீலினால் கிடைக்கப் போகும் மிகப் பெரிய நன்மை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக