அறிமுக தினம் நெருங்கிவிட்டதையடுத்து சியோமி நிறுவனம் வரவிருக்கும் புதிய மி ஸ்மார்ட்போனின் புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளது, அந்த போஸ்டர்கள் மி 10 யூத் எடிஷன் ஸ்மார்ட்போனின் வண்ண மாறுபாடுகளை வெளிப்படுத்துகிறது.
வெளியான படங்களின்படி, சியோமி மி 10 யூத் எடிஷன் 5ஜி மொத்தம் நான்கு வண்ணங்களில் வரும் - Pink Peach, Orange Storm, Green Tea மற்றும் Blue Berry. இந்த ஸ்மார்ட்போன் 8 மிமீ தடிமன் கொண்ட மிக மெலிதான சாதனமாக இருக்கும் என்றும் அதன் எடை 200 கிராம் அளவில் இருக்கும் என்றும் சியோமி நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.
கடந்த மாதம் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சியோமி மி 10 லைட் 5ஜி போன்றதொரு சாதனமாகவே மி 10 யூத் எடிஷன் தெரிகிறது. இருப்பினும், இந்த சீன மாடலானது ஐரோப்பிய மாடலுடன் ஒப்பிடும்போது மேம்பட்ட கேமரா அமைப்பைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி மி 10 யூத் எடிஷன் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் சதுர வடிவிலான கேமரா அமைப்பு இடம்பெறுகிறது. அதிகன் நான்காவது சென்சார் ஒரு சதுர வடிவ லென்ஸ் ஆகும், இது பெரிஸ்கோப் ஸூம் லென்ஸைக் கொண்டுள்ளது என்பதைக் குறிக்கிறது, இது 50x ஸூம் வரை செல்லம் என்றும் எதிர்பார்க்கலாம். இந்த இடத்தில ஐரோப்பிய பதிப்பில் பெரிஸ்கோப் ஸூம் லென்ஸ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொருத்தவரை சியோமி மி 10 யூத் எடிஷனில் ஒரு 4,160 எம்ஏஎச் பேட்டரி இருக்கலாம். முன்னதாக 3சி சான்றிதழ் தளத்தில் காணப்பட்ட போது இது 22.5W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவை வெளிப்படுத்தி இருந்தது. எல்லாவற்றிக்கும் மேலாக MIUI 12 ஓஎஸ் கொண்டு இயங்கும் முதல் ஸ்மார்ட்போனாக
MI 10 யூத் எடிஷன் இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதி.
நினைவூட்டும் வண்ணம், ஐரோப்பாவில் அறிமுகமான சியோமி மி 10 லைட் 5ஜி ஆனது 6.57 இன்ச் அளவிலான முழு எச்டி+ அமோலேட் டிஸ்ப்ளேவை வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பின் கீழ் கொண்டுள்ளது, மேலும் இது 2.4GHz ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC மூலம் இயக்கப்படுகிறது. இது 20W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,160mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
சியோமி மி 10 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ள க்வாட் ரியர் கேமரா அமைப்பில் 48 மெகாபிக்சல் மெயின் லென்ஸ் + 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர் + 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை ஒரு 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக