Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 23 ஏப்ரல், 2020

ரூ. 11.13 லட்சம் ஆரம்ப விலையில் 2020 Triumph Street Triple RS பைக் அறிமுகம்..!

ட்ரையம்ப் மோட்டார்சைக்கிளஸ் இந்தியா நிறுவனம் புதிய 2020 ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்.எஸ் பைக்கை ரூ. 11.13 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இப்புதிய ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்.எஸ் பைக்கில் பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புகள் உள்ளன. மேலும் புதிய விதிகளுக்கு ஏற்ப எஞ்சினும் மாற்றி அமைக்கபப்ட்டுள்ளன. பல்வேறு காஸ்மெட்டிக் அப்டேட்டுகளும் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளன.

அதன்படி புதிய ட்வின் எல்.இ.டி முகப்பு விளக்குகள், எல்.இ.டி பகல்நேர விளக்குகள், பின்பக்கத்தில் அப்டேட் செய்யப்பட்ட சிறப்பம்சங்கள், கூர்மையான தோற்றம், சிறியளவில் அகலமான எரிவாயு கலன் போன்றவை 2020 ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்.எஸ் பைக்கில் புதியதாக உள்ளன.

இந்த பைக்கினுடைய அப்டேட் செய்யப்பட்ட டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் புதிய தோற்றத்தில் உள்ளது. மேலும் புதிய கிராஃபிக்ஸ் வடிவமைப்புகள், கூடுதலாக வண்ணத் தேர்வுகள் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் பல்வேறு கவர்ச்சி அம்சங்கள் இதில் உள்ளன.

புதிய 2020 ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் மாடலில் மாற்றி அமைக்கப்பட்ட, புதிய விதிகளுக்குட்பட்ட 765 சிசி இன்-லைன் 3 சிலிண்டர் யூனிட் உள்ளது. இது 121 பிஎச்பி பவர் மற்றும் 79 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் அப்/டவுன் குயிக்‌ஷிஃப்டர் ஸ்டான்டர்ட் அம்சமாக இருக்கும். அதனுடன் ஸ்ளிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்.எஸ் பைக் உயர்ரக மாடலாகும். இந்த மாடலில் இடம்பெற்றிருந்த குறைந்த நிலை மாடல் தற்போது விற்பனையில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. 2020 ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்.எஸ் பைக்கிலுள்ள எஞ்சின், 765 சிசி மோட்டோ 2 எஞ்சினில் இருந்து உருவாக்கப்பட்டதாகும்.

முன்னதாக 2020 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்.எஸ் மாடல் கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் ட்ரையம்ப் நிறுவனம் இந்த பைக்கின் விற்பனையை தாமதப்படுத்தியது.

இந்நிலையில் தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்ததை அடுத்து பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய புதிய ரக வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி ட்ரையம்ப் நிறுவனமும் 2020 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்.எஸ் பைக்கை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் பாரம்பரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ட்ரையாம்ப் மோோோடார் சைக்கிள் இந்தியாவில்ல் விரைவில் பிஎஸ்-6 மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரும் என உறுதி அளித்தது. அப்போது அதற்குரிய விலை நிர்ணயம் செய்யப்படும் எனவும் கூறியது.

அதன்படி, புதிய 2020 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்.எஸ் பைக் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய அவசர நிலை காரணமாக பைக்கின் உத்தரவாதம் மற்றும் இலவச சேவை வழங்கும் திட்டத்தை மேலும் நீட்டித்துள்ளது ட்ரையம்ப் நிறுவனம்.

இந்திய பைக் ஆர்வலர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த 2020 ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்.எஸ் மாடல் ஒருவழியாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுவிட்டது. இந்த பைக் கவாஸாகி இசட்900 மற்றும் கேடிஎம் 790 டியூக் ஆகிய மாடல்களுக்கு சரிநிகர் போட்டியாக அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக