Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 23 ஏப்ரல், 2020

Netflix வாசிகளே..! உங்களுக்கு இரு குட் நியூஸ்!

COVID-19 விளைவாக அறிவிக்கப்பட்டுள்ள லாக்ட்வுன் காரணமாக உலகம் ஸ்தம்பித்து, உலகெங்கிலும் உள்ள மக்கள் வீட்டிலேயே தங்கியுள்ள நிலையில், ஒரு சாதாரண பொழுதுபோக்கு தளமாக இருந்த நெட்பிலிக்ஸ் ஒரு அதிசிறந்த பொழுதுபோக்கு ஆதாரமாக உருமாறியள்ளது.

உங்கள் ஸ்மார்ட்போன் வழியாக நெட்பிலிக்ஸ் பார்ப்பதென்பது ஒரு வெறுப்பான காரியம் ஆகும். ஏனெனில் தற்செயலான தொடுதல்கள் அனைத்தும் பிளேபேக்கையும் குழப்புகின்றன.

நெட்பிலிக்ஸ் இந்த சிக்கலை ஒப்புக் கொண்டுள்ளது போல் தெரிகிறது. ஏனெனில் அதன் ஆண்ட்ராய்டு ஆப்பிற்கான இந்த சிக்கலை சரி செய்யும் ஒரு புதிய அம்சம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

இந்த புதிய அம்சம் “ஸ்கிரீன் லாக்” என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது வேகமான fast forward / backwards மற்றும் play / pause போன்ற அனைத்து திரை செயல்பாடுகளையும் முடக்குகிறது. எனவே நீங்கள் அடுத்தமுறை ஸ்மார்ட்போன் வழியாக நெட்பிலிக்ஸ் பார்க்கும்போது இதை ஆக்டிவேட் செய்ய மறக்க வேண்டாம்.

நெட்பிலிக்ஸ்-இல் உள்ள ஸ்க்ரீன்-லாக்கை இயக்குவது எப்படி?

நெட்பிலிக்ஸில் அறிமுகமாகியுள்ள புதிய ஸ்க்ரீன் லாக் அம்சத்தை இயக்க, பின்வரும் எளிமையான வழிமுறைகளை பின்பற்றவும்:

01. ஸ்க்ரீனின் அடிப்பகுதியில், “ஸ்க்ரீன் லாக்” ஐகானைக் காண்பீர்கள். அதைகிளிக் செய்யவும்.

02. ஸ்க்ரீனில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் மறைந்துவிடும். மேலும் ஸ்க்ரீனின் அடிப்பகுதியில் ஸ்க்ரீன் லாக் செய்யப்பட்டு இருப்பது குறிக்கப்பட்டு இருக்கும்.

03: மீண்டும் ஸ்க்ரீனை அன்லாக் செய்ய “ஸ்க்ரீன் லாக்" ஐகானை அழுத்தி, பின்னர் “அன்லாக் கண்ட்ரோல்ஸ்" என்பதை கிளிக் செய்யவும்,அவ்வளவு தான்.

இந்த இடத்தில் திரும்பிச் செல்ல ஸ்வைப் செய்தல், ஹோம் செல்ல கீழே இருந்து ஸ்வைப் செய்வது போன்ற ஆண்ட்ராய்டு கெஸ்சர்கள் தொடர்ந்து செயல்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நகர்ந்து கொண்டே நெட்பிலிக்ஸ் உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கோ அல்லது குழந்தைகளுடன் உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கோ இது ஒரு சிறந்த டூல் ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக