Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 1 மே, 2020

இனி ஒரே நேரத்தில் 100 பேர் வரை வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசலாம்... கூகுள் நிறுவனத்தின் புதிய இலவச சேவை...

கூகிள் சந்திப்பு  ஒரே நேரத்தில்  100 பேர் வரை குழு வீடியோ மாநாடுகளை இலவசமாக நடத்தலாம் என தற்போது கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வரும் இந்த சூழலில் மக்கள் கூடுவதை தவிர்க்க உலக நாடுகள் முழுவதும் லாக் டவுன் எனப்படும் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தபடுகின்றனர்.எனவே, வீடியோ கான்பரன்சிங் சேவைகள் மூலம் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜூம் நிறுவனம் இந்த வீடியோ கான்பரன்சிங் முறையில் புதிய வசதிகளை கொண்டு வந்தது. ஆனால் தகவல்கள் திருடப்படுகின்றனர் என்ற தகவலால் அதனை மக்கள் பயன்படுத்த தயங்கினர்.

மேலும், வாட்ஸ் ஆப் நிறுவனம் குறைந்தது 4 பேர் வரை பேசும் வகையில் வீடியோ கான்பரன்சிங் வசதியை அறிமுகம் செய்து வைத்தது. இந்நிலையில், இந்நிறுவனம் தற்போது 8 பேர் வரை இந்த சேவையை பயன்படுத்தும் வகையில் இந்த சேவையை விரிவு படுத்தியுள்ளது.

இந்த வீடியோ கான்பரன்சிங்  துறையில் தற்போது  கூகுள் தனது பிரீமியம் வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை வெளியிட்டது. இந்த, கூகிள் சந்திப்பு முதலில் கட்டண கார்ப்பரேட் சூட் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக இந்த சேவையை ஒரே நேரத்தில்  100 பேர் வரை குழு வீடியோ மாநாடுகளை இலவசமாக நடத்தலாம் என தற்போது கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து, கூறிய தயாரிப்பு நிர்வாக இயக்குனர் ஸ்மிதா ஹாஷிம், இந்த குழு  சந்திப்பு பல வணிகங்களுக்கும் பள்ளிகளுக்கும், வேலையாட்களுக்கும், பலதரப்பினருக்கும்  எவ்வாறு உதவியது என்பதை நாங்கள் ஏற்கனவே பார்த்தோம். மேலும், தனிப்பட்ட பயனர்களுக்கும் உயர்தர மற்றும் மிகவும் பாதுகாப்பான சேவையின் தேவையை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக