நாட்டின் மிகப்பெரிய பணக்கார சுவாமி என்று அழைக்கப்படும் திருமலா திருப்பதி தேவஸ்தானம், கொரோனா வெடிப்புக்கு மத்தியில் 1,300 ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டில் மிகப்பெரிய ஆலயமான இங்கு, சன்னதியில் உள்ள துப்புறவு மற்றும் விருந்தோம்பல் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் கொரோனாவினால் நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளதால், மே 1 முதல் அவர்கள் பணிக்கு வர வேண்டாம் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டின் பணக்கார கோவிலான திருப்பதியிலேயே லே ஆஃப் எனில், மற்ற இடங்களில் எப்படி இருக்கும், இந்த லே ஆஃப் பூதம் என்று நினைத்து பார்க்கவே பயமாய்த் தான் இருக்கிறது. கொரோனா லாக்டவுன் தொழிலாளர்களை நிர்வகிக்கும் மனித வள நிறுவனத்துடன் டிடிடி கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஏப்ரல் 30 அன்று முடிந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக இந்த நேரத்தில் ஊழியர்களை கொண்டு வரும் புதிய டெண்டர்கள் ஏலம் விடப்பட்டிருக்கும். ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக டிடிடி அறக்கட்டளை வாரியத்தை சந்தித்து இறுதி செய்ய முடியவில்லை என்றும் செய்திகள் வெளியானது.
ஆக எல்லாம் விதிமுறைகளின் படி நடந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
கோவில்கள் மூடல்
தற்போது இந்த தொழிலாளார்களுக்கு எந்த ஒரு வேலையும் இல்லை என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் கொரோனா பிரச்சனை காரணமாக அனைத்து விருந்தினர் மாளிகைகளும் மூடப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை காட்டி நாடு தழுவிய பூட்டுதல்களை கருத்தில் கொண்டு, 50 துணைக் கோவில்களும் பூட்டப்பட்டுள்ளன.
இன்னும் மூடப்படுமா?
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு தழுவிய பூட்டுதல் காரணமாக மே 3 வரை மூடுவதாக வாரியம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் மே 4 வரை தொடங்கி மூன்றாம் கட்ட பூட்டுதலை அறிவித்ததால், கோவிலின் அறக்கட்டளை மூடப்படுவது குறித்து எந்த அறிக்கையும் இன்னும் விடுக்கப்படவில்லை.
128 ஆண்டுகளுக்கு பிறகு மூடல்
ஆக 128 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதல் முறையாக மூடப்பட்டுள்ளதாகவும், 2000 ஆண்டுகள் பழைமையான வரலாற்றைக் கொண்ட கோயில் மதச் சடங்குகள் மற்று சூரிய கிரகணங்களுக்காக மட்டுமே மூடப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் தற்போது நீண்ட நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக