பவுர்ணமிக்கு பிறகான எட்டாம் நாள் கிருஷ்ண பட்ச அஷ்டமி. தேய்பிறை அஷ்டமி. அஷ்டமி திதி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த திதி. இந்த திதியில் பிறந்தவர்கள் சிறந்த வாக்குவன்மை கொண்டவர்கள். ஒன்பதாம் நாள் நவமி ஸ்ரீராமர் பிறந்த திதி. நவமியில் பிறந்தவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். திடமான உடலமைப்பைக் கொண்டவர்கள். மனதில் தைரியம் கொண்டவர்கள்.
சூரியனும், சந்திரனும் தங்களின் பணியை செய்து வந்த போது சில நேரத்தில் தனது கடமை செய்வதில் இருந்து தவறவே, பூமியில் இருப்பவர்களுக்கு ஒளியும் ஆற்றலும் கிடைக்காமல் போனது. இது சிவனுக்கு தெரியவரவே, சந்திரனை அழைத்து எச்சரித்தார். தினசரியும் பணி செய்வதால் உடலும் மனமும் சோர்ந்து போகிறது. எங்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. ஓய்வு கிடைத்தால் என் பணிகளை சிறப்பாக செய்வோம் என்று கூறினார் சந்திரன்.
15 திதிகள்
சந்திரனுக்கு கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ள அனுமதித்த சிவன், சந்திரனின் பணிகளை பார்வையிட 15 பேரை நியமித்தார். அவர்களே திதிகள் என்று அழைக்கப்படுகின்றனர். அமாவாசை, பிரதமை, துதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, பவுர்ணமி என்னும் திதிகள் ஆவர்.
சந்திரனுக்கு வேலை
சந்திரனின் ஓய்வுக்குப் பிறகு வரும்போது இந்தத் திதிகள் வளர்பிறை திதிகள் என்றும், சந்திரனின் முழுநேரப் பணிக்குப் பிறகு இவர்கள் வரும்போது தேய்பிறை திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த 15 பேரும் வளர்பிறை, தேய்பிறையில் தங்களின் பணிகளை செய்தனர். இதனால் சந்திரனுக்கு பவுர்ணமியில் முழுநேர பணியும் அமாவாசையில் முழுக்க ஒருநாள் ஓய்வு கிடைத்தது. அதே நேரத்தில் பௌர்ணமி திதிக்கு ஒருநாள் முழுக்க வேலை இருந்தது.
சிவனின் சாபம்
அமாவாசைக்கு ஒருநாள் முழுக்க வேலை கிடைத்தது. அதே நேரத்தில் பிற திதிகள் தங்களுக்கு இரண்டு நாட்கள் வேலை கொடுத்துவிட்டதாக வருந்தின. அப்போது திதிகளின் முக்கியத்தினை சிவன் சொல்லிக்கொண்டிருந்த போது, அஷ்டமியும் நவமியும் அதை கண்டு கொள்ளவில்லை. இதனால் கோபப்பட்ட சிவன், அந்த திதிகளுக்கு சாபம் கொடுத்தார்.
மகாவிஷ்ணு அருள்
மக்கள் உங்க இரண்டு பேரையும் ஒதுக்கி வைப்பார்கள் என்று சாபமிடவே, அதைக்கேட்டு வருத்தப்பட்ட அஷ்டமியும் நவமியும், தங்களின் குறைகளை தீர்க்கவேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் முறையிட்டு வேண்டிக்கொண்டன. அவர்களுக்கு வாக்கு கொடுத்த மகாவிஷ்ணு, அஷ்டமி திதியில் கிருஷ்ணராகவும், நவமி திதியில் ஸ்ரீராமராகவும் பிறந்து அருள்புரிந்தார். அதுதான் இன்றைக்கு கோகுலாஷ்டமியாகவும், ஸ்ரீராமநவமியாகவும் கொண்டாடப்படுகிறது.
கோடீஸ்வரர்கள் யோகம்
இன்றைக்கு வளர்பிறை அஷ்டமி திதி. ஆயில்யம் நட்சத்திரமும் அஷ்டமி திதியும் இணைந்து வருவது சிறப்பான நாள். இந்த நாளில் கடன் அடைக்கலாம். அஷ்டமியில் பிறந்தவர்களுக்கு குபேர அந்தஸ்து கிடைக்கும். மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக இருப்பார்கள். அஷ்டமி திதி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த திதி என்பதால் இந்த திதியில் பிறந்தவர்கள் சிறப்பானவர்கள். சிறந்த வாக்குவன்மை கொண்டவர்கள். புத்திரபாக்கியம் உடையவர்கள். செல்வ வளமும் செல்வாக்கும் கொண்டவர்கள். மனைவிக்கு கட்டுப்படக்கூடியவர்கள். ஆசைகள் அதிகம் கொண்டவர்கள்.
கடன் அடையும்
பாதி ஒளி பாதி இருள் கலந்தது அஷ்டமி நவமி. அர்த்தசந்திரன். எல்லாமே சமம் என்பதை உணர்த்தும் திதிகள். அஷ்டமி, ஆயில்யம் நட்சத்திரம் கடன் அடையும். உற்சாகமான நாள். வதந்தி தீயாக பரவும். எதிர்பாராத அதிர்ஷ்டம், குபேர அந்தஸ்து கொடுப்பார்கள். இந்த திதியில் பிறந்தவர்கள் மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக வாழ்கின்றனர்.
மன தைரியம் கொண்டவர்கள்
நவமி ஸ்ரீராமர் பிறந்த திதி. நவமியில் பிறந்தவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். திடமான உடலமைப்பைக் கொண்டவர்கள். மனதில் தைரியம் கொண்டவர்கள். எதிர்ப்புகளுக்கு அச்சம் கொள்ளாதவர்கள். எதிரிகளை தைரியமாக சமாளிப்பவர்கள். கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள். தமது விருப்பம் போல வாழக்கூடியவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக